Sunday, January 1, 2012

உலகம் தட்டை முஸ்லீம் கும்பலின் தாக்குதல்கள் காரணமாக நைஜீரியாவில் எமர்ஜன்ஸி அறிவிக்கப்பட்டுள்ளது

உலகம் தட்டை முஸ்லீம் கும்பலின் தாக்குதல்கள் காரணமாக நைஜீரியாவில் எமர்ஜன்ஸி அறிவிக்கப்பட்டுள்ளது

-
குரானில் உலகம் தட்டை என்றுதான் கூறுகிறது. ஆகவே உலகமெங்கும் பள்ளிக்கூடங்களில் உலகம் தட்டை என்றுதான் சொல்லித்தரவேண்டும் என்று முஸ்லீம்கள் இப்போது கோர ஆரம்பித்திருக்கிறார்கள்.

நைஜீரியாவில் போகோ ஹராம் (அறிவியல் படிப்பு ஹராம் ) என்ற அமைப்பு இதனை ஒட்டி நைஜீரியாவில் தொடர்ச்சியாக சாதாரண மக்கள் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது.

நைஜீரியாவில் பாதிக்கு பாதி முஸ்லீம்களும் கிறிஸ்துவர்களும் இருக்கிறார்கள்.


இதனை சமாளிக்க முடியாமல் நைஜீரியாவின் ஜனாதிபதி குட்லக் ஜோனதன் நைஜீரியாவில் எமர்ஜன்ஸி அறிவித்துள்ளார்

முஸ்லீம்களின் மீது பாசமாக, அவர்கள் நடத்தும் அட்டூழியங்களுக்குகெல்லாம் சப்பைக்கட்டு கட்டும் தமிழ்நாட்டு கம்யூனிஸ்டுகளுக்கும், காங்கிரஸ்காரர்களுக்கும், திமுக காரர்களுக்கும், திக காரர்களுக்கும் இனிமேலாவது புத்திவருமா?
அவர்கள் முஸ்லீம்களுக்கு புத்தி சொல்வார்களா? அல்லது முஸ்லீம்களுக்கு பயந்துகொண்டு அவர்கள் உளர்வதற்கெல்லாம் ஆதரவு அளிப்பார்களா?

நன்றி. www.ezhila.blogspot.com

Thursday, December 8, 2011

கேரளாவின் நிலக்கல் பகுதியில் 10க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் மீது தாக்குதல்

நிலக்கல்: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் தமிழக பக்தர்கள் மீதான தாக்குதல் தொடர்கதையாகியுள்ளது. நிலக்கல் பகுதியில் தமிழக ஐயப்ப பக்தர்களின் வாகனங்களை நிறுத்தி சரமாரியாக ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. டிரைவர்களிடமிருந்து பணத்தையும் அக்கும்பல் பறித்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் தங்கிச் செல்லும் முக்கியப் பகுதி நிலக்கல் ஆகும். இங்கு பிரபலமான சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். மேலும், நிலக்கல்லானது பிரபலமான சுற்றுலாத் தலமும் கூட.

இந்த நிலையில், இப்பகுதியில் ஒரு கும்பல் இன்று தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்களின் வாகனங்களை நிறுத்தி சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளது. அப்பகுதியில் வந்த தமிழக பக்தர்களின் வாகனங்களை நிறுத்திய அக்கும்பல் 10க்கும் மேற்பட்ட வாகனங்களை தாக்கி சேதப்படுத்தியது. பின்னர் டிரைவர்களிடமிருந்து பணத்தையும் அவர்கள் பறித்துக் கொண்டு ஓடி விட்டனர்.

இந்த சம்பவத்தால் நிலக்கல் பகுதியில் பெரும் பதட்டமும், பரபரப்பும் நிலவுகிறது.

நன்றி: ezhila.blogspot.com

Sunday, November 27, 2011

பாகிஸ்தான் தீவிரவாதி கசாபுக்காக இதுவரை 16.17 கோடி செலவு !

மும்பை : மும்பை தாக்குதல் சம்பவத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாபுக்காக மகாராஷ்டிரா அரசு இதுவரை மொத்தம் 16.17 கோடியை செலவு செய்துள்ளது. இத்தகவலை மாநில உள்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 2008ம் ஆண்டு மும்பையில் தாக்குதல் நடத்தி 166 பேரை கொலை செய்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேரில் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான், அவனுக்கு தனி நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது. 2008ம் ஆண்டு முதல் கசாப் ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறான். இந்த 3 ஆண்டுகளில் கசாபுக்காக மகாராஷ்டிரா அரசு மொத்தம் 16.17 கோடியை செலவு செய்துள்ளது. இதில் கசாப்பின் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ள இந்திய திபெத் எல்லை பாதுகாப்பு படையினருக்கு மட்டும் 10.87 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
உணவுக்கு 27,520ம், மருத்துவத்துக்கு 26.953ம் செலவு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி ஆர்தர் ரோடு சிறையில் அவனை அடைக்க தனி அறை 5.29 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உள்துறை அமைச்சக அதிகாரி தெரிவித்தார். கசாபின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. அவனுடைய உடல் ஆரோக்கியமும் மிகவும் முக்கியமானது. இதனால் இப்போதைக்கு கசாபுக்கு செய்யப்படும் செலவில் எந்த மாற்றமும் ஏற்பட வாய்ப்பு இல்லை என்று அந்த அதிகாரி கூறினார்.

நன்றி. ezhila.blogspot.com

Saturday, September 24, 2011

தவ்ஹீத் ஜமாத், முஸ்லீம் அமைப்புகளுக்கு ராம.கோபாலன் கண்டனம் வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 23, 2011, 14:30 [IST] A A A

சென்னை: சுழற்சி முறையில் தாழ்த்தப்பட்டோருக்கு தனித் தொகுதிகள் ஒதுக்குவதை முஸ்லீம் அமைப்புகள் எதிர்ப்பது கண்டனத்துக்குரியது என்று இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளாட்சி மன்றத் தேர்தலில் இரு ஊர்களில் தாழ்த்தபட்டோர்க்கு ஒதுக்கப்பட்டுள்ளதை எதிர்த்து வருகிறார்கள் முஸ்லீம்கள். ஒன்று நெல்லிக்குப்பம், மற்றொன்று பேரணாம்பட்டு.

நெல்லிக்குப்பத்தில் சென்ற முறை பொது வேட்பாளராக தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர் கூட்டணிக் கட்சிகளால் தேர்ந்தெடுக்கபட்டார் என்பதால் இந்தமுறை சுழற்சி முறையில் வருகிற தனித் தொகுதி அந்தஸ்தை விலக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர் முஸ்லீம்கள்.

அதுபோல பேரணாம்பட்டை சுழற்சி முறையில் தாழ்த்தபட்டோருக்கு ஒதுக்குவதை எதிர்த்து தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது. இதனை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.

பேரணாம்பட்டுத் தொகுதியில் நகரத்தில் சுமார் 22% முஸ்லீம்கள் இருக்கிறார்கள். இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள அந்த ஊரில் கடந்த சுமார் 30 வருடங்களாக முஸ்லீம்களே நிறுத்தப்பட்டு வெற்றிபெற்று வந்துள்ளார்கள்.

இன்று சுழற்சிமுறையில் இதனைத் தனித் தொகுதியாக்கி ஒரு தாழ்த்தப்பட்டவரை ஏற்க முஸ்லீம்கள் மறுக்கிறார்கள். இதனை இந்துக்கள் கட்சி சார்பை கடந்து நினைவில் நிறுத்த வேண்டும்.

இந்த நிகழ்வுகள் முஸ்லீம் பெரும்பான்மையானால் என்ன நடக்கும் என்றும், முஸ்லீம்கள் தாழ்த்தபட்டோருக்கு கேடயம் அல்ல, கேடு என்பதை அந்த சமுதாயத் தலைவர்கள் உணர வேண்டும் என்றும் இந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது என்று கூறியுள்ளார் ராம.கோபாலன்.

நன்றி ezhila.blogspot.com

Friday, August 5, 2011

விநாயகர் சதுர்த்தியை மக்கள் எழுச்சி விழாவாக கொண்டாட வேண்டும் இந்து திராவிட மறுமலர்ச்சி கழக செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம்

திருச்சி, ஆக.4-

விநாயகர் சதுர்த்தியை மக்கள் எழுச்சி விழாவாக கொண்டாட வேண்டும் இந்து திராவிட மறுமலர்ச்சி கழக செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செயல்வீரர்கள் கூட்டம்

இந்து திராவிட மறுமலர்ச்சி கழக மாநகர், மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் திருச்சி பெரியகடைவீதியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகர் மாவட்ட அமைப்பாளர் தளவாய் ராஜேஷ் தலைமை தாங்கினார். பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். இதில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி மக்கள் எழுச்சி விழாக்குழுக்களின் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதன் தலைவராக சவுந்திரபாண்டியன், துணை தலைவராக கண்ணன், செயலாளராக குணசேகரன், நிதிக்குழு தலைவராக பழனியப்பன் உள்பட பலர் தேர்வு செய்யப்பட்டனர்.

எழுச்சி விழாவாக...

விநாயகர் சதுர்த்தியை மக்கள் எழுச்சி விழாவாக கொண்டாட ஆன்மிக சான்றோர்களை அழைப்பது, மகளிர் பங்குபெறும் திருவிளக்கு பூஜை, இளைஞர்கள் பங்கு பெறும் மாநகர் தழுவிய விநாயகர் வழிபாட்டு யாத்திரையை நடத்துவது, விநாயகர் விசர்ஜன ஊர்வலம் வரும் 3-ந் தேதி மாலை நடத்துவது, விநாயர் சதுர்த்தி விழாவில் சுவாமி விவேகானந்தர் கருத்துக்களை முன்னிலைப்படுத்துவது, மத்திய அரசு சட்டமாக்க முயற்சி செய்கிற மதவாத பயங்கரவாத சட்ட முன்வடிவை கண்டித்து தடுப்பதற்கு மக்கள் எழுச்சியை ஏற்படுத்துவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் ராஜா, சிங்காரம், வேலு, நடராஜன், பாலகிருஷ்ணன், அமல்ராஜ் உள்பட பலர் கூட்டமைப்பின் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். முடிவில் சித்தார்த்தன் நன்றி கூறினார்.

நன்றி
ezhila.blogspot.com

Wednesday, June 1, 2011

அகதி, ஏழை என்ற சொற்களை நீக்கி வேறுபாடுகளின்றி இந்துக்கள் சமூகம் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் நல்லை ஆதீன முதல்வர்

Monday, 30 May 2011 12:55 Hits: 4 . .யாழ்நகர் நிருபர் : இந்து மதம் ஏனைய மதங்களைப் போன்று உரிமை பெற்ற மதமாக விளங்கும் நிலை ஏற்பட வேண்டுமென்று தெரிவித்த நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் இதற்கு இந்து மாமன்றம் உதவ வேண்டுமென்றும் தெரிவித்தார். பல்வேறு துன்பப்பட்ட எம் மக்களிடத்தே அகதி,ஏழை என்ற சொல்லை நீக்கி எந்த வித பேதமுமில்லாமல் தலை நிமிர்ந்து வாழும் சமூகமாக மாற வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

அகில இலங்கை இந்து மாமன்றம் ஏற்பாடு செய்த சிவத் தொண்டர் மாநாடு நல்லூர் துர்க்காதேவி மண்டபத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை ஆரம்பமான போது ஆசியுரை வழங்குகையிலைலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் அவர் தனது ஆசியுரையில்;
இன்றைய புனித நாளில் பல சிறப்புக்களினைக் கொண்ட இந்த நல்லூரான் புனித பிரதேசத்தில் எல்லோரும் ஒன்று கூடி இருப்பது எமது இந்து சமயத்தின் பெருமையையும் சிறப்புக்களையும் எடுத்துக்காட்டுகிறது. நாம் என்ன செய்கிறோம் இனி என்ன செய்ய வேண்டுமெனக் கூறும் இந் நாளினை நாம் வரவேற்கின்றோம்.இலங்கையின் பல திசைகளிலிருந்தும் தமது மதத்தினை பிரதிபலிக்கும் நோக்கில் வந்திருப்பது பெருமைக்குரியது.

இங்கு எல்லோரையும் ஒன்று திரட்டி எழுச்சியாக எமது பாரம்பரியக் குதிரை நடனத்துடன் ஊர்வலமாக அழைத்து வந்தது மதத்தின் பெருமையை எடுத்துக் காட்டுவதாக அமைகிறது. குறிப்பாக எமது மதம், மொழி, பண்பாடு,செயற்பாடு என்பனவற்றினைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தின் மத்தியில் நாம் உள்ளோம். இளம் சமுதாயத்தினர்.இதனைப் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும்.

யாழ்.மண்ணின் தமிழ்ப் பண்பாட்டினைக் காண்பது மகிழ்ச்சியினை ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே நாம் எமது பண்பாட்டு விழுமியங்களைப் பேணிப்பாதுகாத்துச் செயற்பட வேண்டும். ஏனைய மதத்தினர் தமது உடைகள் மூலம் தம்மை பிரதிபலிக்கின்றனர்.ஆனால் நாம் எல்லாவற்றையும் இழந்து விட்டு இருக்கிறோம். எமது மதத்தினை நாமே பிரதிப்பலித்துக் காப்பாற்ற வேண்டும்.

நாம் பலவற்றை இழந்திருக்கின்றோம். என்பதற்காக வேறுபாடு காட்டக்கூடாது. அதிலும் அகதி ஏழை என்ற சொல்லினை நீக்க வேண்டும்.இதற்காக இந்து மாமன்றம் பாடுபட்டு வருகிறது. எனினும் இதன் பணி சகல தேசத்திலும் பரவலாகப் பெருகி நமது அடையாளங்களை நாமே பாதுகாத்து தலை நிமிர்ந்து வாழும் சமூகமாக மாறவேண்டும். ஏனைய மதங்களினைப் போன்று உரிமை பெற்ற மதமாகவும் அச்சமில்லாதவர்களாக இந்துக்கள் வாழ வேண்டும்.இதற்கு இந்து மாமன்றம் உதவ வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.

நன்றி: ezhila.blogspot.com

Thursday, May 26, 2011

அந்தணரல்லாத இந்துப் பூசகர்களுக்கான இருவாரகால வதிவிடப் பயிற்சி

அந்தணரல்லாத இந்துப் பூசகர்களுக்கான இருவாரகால வதிவிடப் பயிற்சி .
Tuesday, 24 May 2011 09:54 Hits: 10 . .இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வருடந்தோறும் ஒழுங்கு செய்து நடத்தப்படும் அந்தணரல்லாத இந்துப் பூசகர்களுக்கான இரண்டு வார கால வதிவிடப் பயிற்சி எதிர்வரும் ஜூலை மாதமளவில் மட்டக்களப்பு,நாவற்குடா இந்து கலாசார நிலையத்தில் நடைபெறவுள்ளது.
இப்பயிற்சியை வழங்குவதற்காகத் தமிழகக் கிராமக் கோவில் பூசாரிகள் பேரவையைச் சேர்ந்த விரிவுரையாளர்கள் வருகைதரவுள்ளனர்.

இப்பயிற்சியைப் பெற விரும்பும் 15 வயதிற்கும் 50 வயதிற்கும் உட்பட்ட முன்னைய ஆண்டுகளில் இப்பயிற்சி பெறாத இந்துப் பூசகர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. ஆர்வமுள்ள பூசகர்கள் தமது பெயர், முகவரி,பணிபுரியும் ஆலயத்தின் பெயர், முகவரி, தொலைபேசி இல, அடையாள அட்டை இல. போன்ற விபரங்களை 0112552825 என்ற தொலைநகல் மூலமோ அல்லது 248/1/1, காலி வீதி, கொழும்பு04 என்ற முகவரிக்கு தபால் மூலமோ அனுப்பி வைக்கலாம். விண்ணப்பங்கள் கிடைக்க வேண்டிய இறுதித் திகதி 2011.05.31. ஆகும்.

மேலதிக விபரங்களுக்கு 0112552641,0112552642 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு திணைக்களம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி www.ezhila.blogspot.com