தயாரிப்பாளர் : அடிக்கடி வாந்தி எடுக்கிற நோயாளியை பத்தி ஒரு படம் எடுக்கப்போறேன்
உதவியாளர் : என்ன பேரு?
தயாரிப்பாளர் : கக்க...! கக்க...!
டிராபிக் போலிஸ் : “ரெட் சிக்னல் போட்டிருக்கே.. ஏன் நிக்காம போயிட்டு இருக்கே?”
நபர் : “எனக்கு கண் தெரிஞ்சா நான் பார்த்திருக்க மாட்டேனா சார். ஆமா.. இதெல்லாம் கேக்கிறீங்களே நீங்க யாரு?”
உதவியாளர் : என்னங்க உங்க ரசிகர்கள் எல்லாம் நிறைய களிம்பு மருந்து அனுப்பியிருக்காங்களே ஏன்?
நடிகர் : போன படத்துல என் பின்னாடி பெரிய படையே இருக்குன்னு டயலாக் பேசினேன் அதை தப்பா புரிஞ்சு கிட்டாங்க போலிருக்கு
கணவன் : என்னடி இது குழந்தை அழுதுக்கிட்டு இருக்கிறது
நீ பாட்டுக்கிட்டு சீரியல் பார்க்கிற..?
மனைவி : அட நீங்க வேற குழந்தையும் சீரியல் பார்த்து தான் அழுகுது
தமிழ் டீச்சர்: அவள் நடந்து சென்றாள்.
இந்த வாக்கியத்தை ஆச்சிரியக்குறியுடன் மாற்றுங்கள் பார்ப்போம்
மாணவன்: டேய் மச்சான், figure டா!
ஒரு நேர்முக தேர்வில்,
கேள்வி கேட்பவர்:how does an electric motor run?
சர்தார்: Dhhuuuurrrrrrrrrr. .....
கோபத்துடன், கேள்வி கேட்டவர்: Stop it.
சர்தார்: Dhhuurrrr dhup dhup dhup...
நோயாளி: தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிடனுமா... என்னால முடியாது டாக்டர்.
டாக்டர்: ஏன் முடியாது?
நோயாளி: ஏன்னா எங்க வீட்டு கோழி வெள்ளை முட்டைதான் போடும்.
நன்றி. பனித்துளி சங்கர்
http://wwwrasigancom.blogspot.com/2010/12/part-5-16122010.html
No comments:
Post a Comment