துறவு என்பது என்னவென்று ஒரு ஜென் கதை சொல்லுகிறேன்
ஒரு சிறுவன் ஜென் தத்துவத்தை கற்றுக்கொள்ள குருவை நாடி சென்றான்.
அவனுக்கு குரு முதலில் வெறுமையாகிவிட்டு வா என்றார்.
சீடனும் முதலில் விசார மார்க்கப்படி வெறுமையாக சென்றான். அதாவது மனதில் எழும் எண்ணத்தை யாருக்கு எழுகிறது இந்த எண்ணம் என்று உற்று பார்த்தான் அந்த எண்ணம் அறுந்துவிடும். அப்படியே எல்லா எண்ணங்களையும் வெட்டித்தள்ளினான். மனம் எண்ணங்களை எழுப்ப இயலாமல் நின்று போனது. மனம் இறந்தவுடன் குருவை நாடிப்போனான். குருவிடன்
குருவே நான் வெறுமையாகிவிட்டேன் என்று சொன்னான்.
குருவோ அந்த வெறுமையையும் எறிந்துவிட்டு வா என்று சொன்னார். அதாவது சீடனுக்குள் ”நான் “ என்ற அறிவு இருக்கிறது. அதையும் தொலைத்துவிட்டு வா என்றார்.
கதையின் நீதி
நான், எனது என்ற அகந்தை எவனுக்கு இருக்கிறதோ அவன் துறவி வேடம் பூண்டாலும் துறவி அல்ல.
நான் என்ற அகந்தை எவனுக்கு இல்லையோ அவன் இல்லறத்தில் இருந்தாலும் துறவியே
துறக்க வேண்டியது நான் என்ற அகந்தையையே.

2 comments:
:) way to go! keep posting more interesting stuffs

Post a Comment