Monday, August 4, 2014

குரு என்பவர் யார்?

யார் குரு என்பவர்?


தத்துவராயர் என்பவர் தன் மாமாவான ஸ்வரூபனந்தர் என்பரோடு ஞானத்தை தேடி(குருவைத்தேடி) புறப்பட்டார்கள்.

இருவ்ரும் ஒரு முடிவு எடுத்தார்கள். தனித்தனியே தேடுவது என்று. அப்பொழுது ஸ்வரூபானந்தர் இருந்த இடத்திலேயே சிவ்னைதுதித்து குருவை அடைந்தார். குரு தத்துவ உபதேசம் செய்தார். அதனால் மகிழ்நத ஸ்வருப்பானந்தர், தத்துவராயரை அழைப்பதற்குள் குரு உடலை உகுத்துவிட்டார்.

ஸ்வரூபானந்தரே தத்துவராயருக்கு உபதேசம் செய்தார். இருவரும் தன்னை அறிந்த நினையில் ஆனந்தமாக இருந்தனர்.

ஒரு பாடலின் அர்த்தம் சொன்னால் புரியும்

உடுத்த முழம் துணி இருக்கிறது. பிச்சை போட பெண்கள் இருக்கிறார்கள். குளிர்ந்த ஓடை நீரைத்தருகிறது. பிச்சாபாத்திரமாக கையே இருக்கிறது. சிவனே குறை ஒன்றும் இல்லை

இதுபோல நிறைய பாடியிருக்கிறார். தத்துவராயர் தன் குருவான ஸ்வரூபானந்தர் மேல் பரணி பாடினார்.(பரணி என்பது போரில் 1000 யானைகளக்கொன்றவர் மேல் பாடுவது). யாரையுமே கொல்லாத ஸ்வரூபானந்தர் மேல் பாடியதால் புலவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

அதற்கு தத்துவராயர் என் குருவின் சன்னதிக்கு வந்து சந்தேகம் கேளுங்கள் என்று சொன்னார். புலவர்களும் குருவின் சன்னதிக்கு வந்து அமர்ந்தார்கள்.

சத்குருவான ஸ்வரூபானந்தர் முன்னிலையில் மனம் இறந்து மார்க்கம் தெளிவானது. அப்படியே நாள் போவது கூட தெரியாமல் இருந்தார்கள். ஒருவழியாக சுயநினைவு வந்து

“அப்பா தத்துவராயா மனம் என்னும் மதயானையை அடக்கி காட்டிய உன் குருவின் மேல் பரணி மட்டும் அல்ல. அதற்கு மேலும் பாடலாம் என்று சொல்லி விடைபெற்றனர்.

நீதி:

எந்த குருவின் முன்னிலையில் மனம் இறந்து மார்க்கம் தெளிவாகிறதோ அவரே நம் சத்குரு”(இதற்கு நாமும் பக்குவமாக இருககவேண்டும்)

No comments: