சகலாவல்லி
மாலை சொல்லி
மொழிப்புலமை
பெறுவோம்
சகலாவல்லி
மாலை சொல்லி
மொழிப்புலமை
பெறுவோம்
வெண்டா
மரைக்கன்றி
நின்பதந்
தாங்கவென் வெள்ளையுள்ளத்
தண்டா
மரைக்குத்
தகாதுகொ லோசக
மேழுமளித்
துண்டா
னுறங்க
வொழித்தான்பித்
தாகவுண் டாக்கும்வண்ணம்
கண்டான்
சுவைகொள்
கரும்பே சகல
கலாவல்லியே. 1
நாடும்
பொருட்சுவை
சொற்சுவை
தோய்தர நாற்கவியும்
பாடும்
பணியிற்
பணித்தருள்
வாய்பங்க
யாசனத்திற்
கூடும்
பசும்பொற்
கொடியே
கனதனற்
குன்றுமைம்பாற்
காடுஞ்
சுமக்குங்
கரும்பே சகல
கலாவல்லியே. 3
அளிக்குஞ்
செழுந்தமிழ்த்
தெள்ளமு
தார்ந்துன்
னருட்கடலிற்
குளிக்கும்
படிக்கென்று
கூடுங்கொ
லோவுளங்
கொண்டுதெள்ளித்
தெளிக்கும்
பனுவற்
புலவோர்
கவிமழை
சிந்தக்கண்டு
களிக்குங்
கலாப மயிலே
சகல
கலாவல்லியே. 3
தூக்கும்
பனுவற்
துறைதோய்ந்த
கல்வியுஞ் சொற்சுவைதோய்
வாக்கும்
பெருகப்
பணித்தருள்
வாய்வட நூற்கடலும்
தேக்குஞ்
செழுந்தமிழ்ச்
செல்வமுந்
தொண்டர்செந்
நாவினின்று
காக்குங்
கருணைக் கடலே
சகல
கலாவல்லியே. 4
பஞ்சப்
பிதந்தரு
செய்யபொற்
பாதபங்
கேருகமென்
நெஞ்சத்
தடத்தல
ராததென்
னேநெடுந்
தாட்கமலத்
தஞ்சத்
துவச
முயர்த்தோன்செந்
நாவு மகமும்வெள்ளைக்
கஞ்சத்
தவிசொத்
திருந்தாய்
சகல
கலாவல்லியே. 5
பண்ணும்
பரதமுங்
கல்வியுந்
தீஞ்சொற்
பனுவலும்யான்
எண்ணும்
பொழுதௌி
தெய்தநல்
காயெழு
தாமறையும்
விண்ணும்
புவியும்
புனலுங்
கனலும்வெங்
காலுமன்பர்
கண்ணுங்
கருத்து
நிறைந்தாய்
சகல கலாவல்லியே.
6
பாட்டும்
பொருளும்
பொருளாற்
பொருந்தும் பயனுமென்பாற்
கூட்டும்
படிநின்
கடைக்கணல்
காயுளங் கொண்டுதொண்டர்
தீட்டுங்
கலைத்தமிழ்த்
தீம்பா
லமுதந் தெளிக்கும்வண்ணம்
காட்டும்வெள்
ளோதிமப் பேடே
சகல
கலாவல்லியே. 7
சொல்விற்
பனமு மவதான
முங்கவி
சொல்லவல்ல
நல்வித்தை
யுந்தந்
தடிமைகொள்
வாய்நளி னாசனஞ்சேர்
செல்விக்
கரிதென்
றொருகால முஞ்சிதை
யாமைநல்கும்
கல்விப்
பெருஞ்செல்வப்
பேறே சகல
கலாவல்லியே. 8
சொற்கும்
பொருட்கு
முயிராமெய்ஞ்
ஞானத்தின்
றோற்றமென்ன
நிற்கின்ற
நின்னை
நினைப்பவர்
யார்நிலந் தோய்புழைக்கை
நற்குஞ்
சரத்தின்
பிடியோ
டரசன்ன
நாணநடை
கற்கும்
பதாம்புயத்
தாயே சகல
கலாவல்லியே. 9
மண்கண்ட
வெண்குடைக்
கீழாக
மேற்பட்ட
மன்னருமென்
பண்கண்
டளவிற்
பணியச்செய்
வாய்படைப்
போன்முதலாம்
விண்கண்ட
தெய்வம்பல்
கோடியுண்
டேனும் விளம்பிலுன்போற்
கண்கண்ட
தெய்வ முளதோ
சகல
கலாவல்லியே. 10
1 comment:
super
Post a Comment