Sunday, November 27, 2011

பாகிஸ்தான் தீவிரவாதி கசாபுக்காக இதுவரை 16.17 கோடி செலவு !

மும்பை : மும்பை தாக்குதல் சம்பவத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாபுக்காக மகாராஷ்டிரா அரசு இதுவரை மொத்தம் 16.17 கோடியை செலவு செய்துள்ளது. இத்தகவலை மாநில உள்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 2008ம் ஆண்டு மும்பையில் தாக்குதல் நடத்தி 166 பேரை கொலை செய்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேரில் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான், அவனுக்கு தனி நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது. 2008ம் ஆண்டு முதல் கசாப் ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறான். இந்த 3 ஆண்டுகளில் கசாபுக்காக மகாராஷ்டிரா அரசு மொத்தம் 16.17 கோடியை செலவு செய்துள்ளது. இதில் கசாப்பின் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ள இந்திய திபெத் எல்லை பாதுகாப்பு படையினருக்கு மட்டும் 10.87 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
உணவுக்கு 27,520ம், மருத்துவத்துக்கு 26.953ம் செலவு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி ஆர்தர் ரோடு சிறையில் அவனை அடைக்க தனி அறை 5.29 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உள்துறை அமைச்சக அதிகாரி தெரிவித்தார். கசாபின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. அவனுடைய உடல் ஆரோக்கியமும் மிகவும் முக்கியமானது. இதனால் இப்போதைக்கு கசாபுக்கு செய்யப்படும் செலவில் எந்த மாற்றமும் ஏற்பட வாய்ப்பு இல்லை என்று அந்த அதிகாரி கூறினார்.

நன்றி. ezhila.blogspot.com