Friday, May 21, 2010

அனைத்து ஜாதி சிறுவர்களுக்கும் அர்ச்சகர் பயிற்சி: கேரளா

கல்பேட்டா: கேரளாவில் இந்து கோவில்களில் உள்ள சம்பிரதாயங்களையும் நடைமுறைகளையும் மாற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் வலுப்பெற்று வரும் நிலையில் மிகப்பெரும் சீர்திருத்த நடவடிக்கையாக ஆதிவாசி சிறுவர்கள் உட்பட அனைத்து ஜாதிகளையும் சேர்ந்தவர்களுக்கு கோவில் அர்ச்சகருக் கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கோவில் பாதுகாப்பு கமிட்டி என்ற அமைப்பு இப்பயிற்சியை அளித்து வருகிறது.

கேரளா, கல்பேட்டா அருகில் பொங்கினி தேவி என்ற கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆதிவாசி இன சிறுவர்கள் உள்ள இந்து சமுதாயத்தை சேர்ந்த அனைத்து பிரிவு சிறுவர்களுக்கும் "உபன்யாணம்' என்ற வேத பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கேரள கோவில் பாதுகாப்பு கமிட்டி என்ற அமைப்பின் உதவியுடன் சிறுவர்களுக்கு வேத பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சி வகுப்பில் ஆதிவாசி இனத்தை சேர்ந்த 14 சிறுவர்கள் உட் பட மொத்தம் 25 சிறுவர்கள் படிக் கின்றனர். இதில், தேர்ந்தெடுக்கப் பட்ட சிறுவர் களுக்கு சமஸ்கிருதம், மந்திரங்கள், வேத சோதிடம் மற்றும் சம்பிரதாயங்கள் ஆகியவை சொல்லி தரப்படுகின்றன. பையனுõர் ஸ்ரீதரன் நம்பூதிரி தலைமையிலான வேத விற்பன் னர்கள் சிறுவர்களுக்கு அர்ச்சகர் பயிற்சி அளிக்கின்றனர். சிறுவர்களுக்கு தங்கள் படிப்பில் பிரச்னை ஏற்படக்கூடாது என் பதற்காக சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் தான் இந்த பயிற்சி அளிக்கப் படுகிறது.வடக்கு கேரளத்தில் கோவில் அர்ச்சகர்கள் கிடைப்பதில் ஏற்படும் சிரமங்கள் தான் இப்பயிற்சி துவங்குவதற்கான காரணம் என்று இப்பயிற்சிக்கான அமைப்பாளர் பாலன் நம்பியார் தெரிவித்தார்.

அர்ச்சகர் பயிற்சிக்கு அனைத்து பிரிவினரும் தரும் ஊக்கம் உற்சாகமளிக்கிறது. பெரும் பாலான நம்பூதிரிகளும் இந்த திட்டத்தில் தாமாக உதவி அளிக்க முன்வந்துள்ளனர். இந்து சமய பழக்க வழக்கங்களையும் நடைமுறைகளையும் பாதுகாக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இதற்கு அனைத்து பிரிவினரின் ஒருமித்த ஆதரவும் பங்கேற்பும் இல்லாமல் இதை பூர்த்தி செய்ய முடியாது என்று பாலன் நம்பியார் கூறினார்.

நன்றி தினமலர்,எழில்

ezhila.blogspot.com

Wednesday, May 19, 2010

5000 வருடங்களுக்கு முன்னால் உலகம் தோன்றியதா?

அப்படித்தான் பைபிளையும் குரானையும் நம்புபவர்கள் கூறுகின்றனர். ஆனால், இந்துமதம் பலகோடி ஆண்டுகளுக்கு முன்னால் பேரண்டம் உருவானது என்று கூறுகிறது. 5000 வருடங்களுக்கு முன்னால் பேரண்டம் படைக்கப்பட்டபோதே மனிதர்களும் ஆறு நாட்கள் கழித்து படைக்கப்பட்டார்கள் என்று யூதர்கள் என்ற மத்தியதரைக்கடலில் வாழும் பழங்குடியினர் நம்புவதை இந்தியாவிலும் பலர் பால் டப்பாவுக்காகவும், காசுக்காகவும், அறிவுஜீவி பட்டத்துக்காகவும் நம்புகின்றனர்.ஆனால், அறிவியலோ, இந்த உலகம் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னால் உருவானது. இந்த பேரண்டம் இன்னமும் பழையது என்றே இந்து சாத்திரங்களையும் தமிழ் வேதங்களையும் நிரூபித்து வருகின்றது.அதனால்தான் கார்ல் சாகன் போன்ற விஞ்ஞானிகள், ஒரு மதத்தை நம்பவேண்டுமென்றால் இந்துமதத்தைத்தான் நம்பவேண்டும் என்று கூறியுள்ளார்கள்.மனிதர்கள் 140000 ஆண்டுகளுக்கு முன்னால் மேக்கப் போட்டத்தையும், கடல் உணவை வேகவைத்து சாப்பிட்டதையும் அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
நன்றி எழில்
ezhila.blogspot.com

Tuesday, May 18, 2010

அகஸ்தியர் முதலியாரா?- அரிய செப்பு தகடு கண்டெடுப்பு!

அகஸ்தியர் முதலியாரா?- அரிய செப்பு தகடு கண்டெடுப்பு!புதன்கிழமை, செப்டம்பர் 26, 2007 அம்பாசமுத்திரம்:நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அகஸ்தியர் கோவிலில் அரிய செப்பு தகடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி பொதிகை மலைப் பகுதியில் தமிழ் தந்த அகஸ்திய மாமுனிவர் வாழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன. மேலும் இம்மாவட்டத்தில் அகஸ்தியருக்கு கல்லிடைகுறிச்சியில் கோவிலும் உள்ளது. இக்கோவிலில் புணரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.இப்புணரமைப்பு பணியின் போது ஒரு செப்பு தகடு கண்டெடுக்கப்பட்டது.இது குறித்து அகழ்வாராய்ச்சி துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட தொல்லியல் துறை அலுவலர் செல்வகுமார் தலைமையில் ஒரு குழு அங்கு ஆய்வு பணி மேற்கொண்டனர்.அப்போது அங்கு கண்டெடுக்கப்பட்ட செப்பு தகடு 16ம் நூற்றாண்டை சேர்ந்தது என்றும் அதில் சிவலிங்கமும், தேவியரின் படமும் வரையப்பட்டுள்ளது.அதே தகட்டில் தமிழில் பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளது. மேலும் அகஸ்தியர் "கைக் கோல முதலியார்" பிரிவைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பு உள்ளது.தொடர்ந்து அங்கு தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.Thatstamil.கம

நன்றி எழில்.

ezhila.blogspot.com