Friday, May 21, 2010

அனைத்து ஜாதி சிறுவர்களுக்கும் அர்ச்சகர் பயிற்சி: கேரளா

கல்பேட்டா: கேரளாவில் இந்து கோவில்களில் உள்ள சம்பிரதாயங்களையும் நடைமுறைகளையும் மாற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் வலுப்பெற்று வரும் நிலையில் மிகப்பெரும் சீர்திருத்த நடவடிக்கையாக ஆதிவாசி சிறுவர்கள் உட்பட அனைத்து ஜாதிகளையும் சேர்ந்தவர்களுக்கு கோவில் அர்ச்சகருக் கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கோவில் பாதுகாப்பு கமிட்டி என்ற அமைப்பு இப்பயிற்சியை அளித்து வருகிறது.

கேரளா, கல்பேட்டா அருகில் பொங்கினி தேவி என்ற கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆதிவாசி இன சிறுவர்கள் உள்ள இந்து சமுதாயத்தை சேர்ந்த அனைத்து பிரிவு சிறுவர்களுக்கும் "உபன்யாணம்' என்ற வேத பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கேரள கோவில் பாதுகாப்பு கமிட்டி என்ற அமைப்பின் உதவியுடன் சிறுவர்களுக்கு வேத பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சி வகுப்பில் ஆதிவாசி இனத்தை சேர்ந்த 14 சிறுவர்கள் உட் பட மொத்தம் 25 சிறுவர்கள் படிக் கின்றனர். இதில், தேர்ந்தெடுக்கப் பட்ட சிறுவர் களுக்கு சமஸ்கிருதம், மந்திரங்கள், வேத சோதிடம் மற்றும் சம்பிரதாயங்கள் ஆகியவை சொல்லி தரப்படுகின்றன. பையனுõர் ஸ்ரீதரன் நம்பூதிரி தலைமையிலான வேத விற்பன் னர்கள் சிறுவர்களுக்கு அர்ச்சகர் பயிற்சி அளிக்கின்றனர். சிறுவர்களுக்கு தங்கள் படிப்பில் பிரச்னை ஏற்படக்கூடாது என் பதற்காக சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் தான் இந்த பயிற்சி அளிக்கப் படுகிறது.வடக்கு கேரளத்தில் கோவில் அர்ச்சகர்கள் கிடைப்பதில் ஏற்படும் சிரமங்கள் தான் இப்பயிற்சி துவங்குவதற்கான காரணம் என்று இப்பயிற்சிக்கான அமைப்பாளர் பாலன் நம்பியார் தெரிவித்தார்.

அர்ச்சகர் பயிற்சிக்கு அனைத்து பிரிவினரும் தரும் ஊக்கம் உற்சாகமளிக்கிறது. பெரும் பாலான நம்பூதிரிகளும் இந்த திட்டத்தில் தாமாக உதவி அளிக்க முன்வந்துள்ளனர். இந்து சமய பழக்க வழக்கங்களையும் நடைமுறைகளையும் பாதுகாக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இதற்கு அனைத்து பிரிவினரின் ஒருமித்த ஆதரவும் பங்கேற்பும் இல்லாமல் இதை பூர்த்தி செய்ய முடியாது என்று பாலன் நம்பியார் கூறினார்.

நன்றி தினமலர்,எழில்

ezhila.blogspot.com

No comments: