Tuesday, December 23, 2014

சூரிய வழிபாடு தமிழில்

சூரியன் போற்றி 108

ஓம் அதிதி புத்ரனே போற்றி
ஓம் அளத்தற்கரியனே போற்றி
ஓம் அறுகுப்பிரியனே போற்றி
ஓம் அருணன் சோதரனே போற்றி
ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி
ஓம் அக்கினி அதிதேவதையனே போற்றி
ஓம் ஆண் கிரகமே போற்றி
ஓம் ஆதிவார நாதனே போற்றி
ஓம் ஆய்வின் இலக்கே போற்றி
ஓம் ஆறாண்டாள்பவனே போற்றி

ஓம் ஆன்மாவே போற்றி
ஓம் ஆதித்யஹ்ருதய ப்ரியனே போற்றி
ஓம் இருள்நீக்கியே போற்றி
ஓம் இயக்க சக்தியே போற்றி
ஓம் ஈசன் வலக்கண்ணே போற்றி
ஓம் உக்கிரனே போற்றி
ஓம் உஷா நாதனே போற்றி
ஓம் உவமைப் பொருளே போற்றி
ஓம் உயிர்களின் வாழ்வே போற்றி
ஓம் உத்திர நாதனே போற்றி

ஓம் உத்திரட்டாதிபதியே போற்றி
ஓம் என்பானவனே போற்றி
ஓம் எருக்கு சமித்தனே போற்றி
ஓம் எழுபரித் தேரனே போற்றி
ஓம் எண்ணெழுத்து மந்திரனே போற்றி
ஓம் எங்கும் நிறைந்தவனே போற்றி
ஓம் ஏற்றமளிப்பவனே போற்றி
ஓம் ஒளிப்பிழம்பே போற்றி
ஓம் ஓராழித்தேரனே போற்றி
ஓம் ஓய்விலானே போற்றி

ஓம் ஓங்காரத் துதித்தவனே போற்றி
ஓம் கதிரவனே போற்றி
ஓம் கண்கண்ட தெய்வமே போற்றி
ஓம் களங்கமிலானே போற்றி
ஓம் கமலம் விரிப்பவனே போற்றி
ஓம் கர்ணன் தந்தையே போற்றி
ஓம் கனலே போற்றி
ஓம் கண்ணில் காவலே போற்றி
ஓம் கற்பரசிச் சேவகனே போற்றி
ஓம் கண்டியூரில் அருள்பவனே போற்றி

ஓம் காசியபர் மைந்தனே போற்றி
ஓம் காயத்ரி தேவனே போற்றி
ஓம் கார்ப்புச் சுவையனே போற்றி
ஓம் காலக் கணக்கே போற்றி
ஓம் காய்பவனே போற்றி
ஓம் காலைமாலைக் கனிவோனே போற்றி
ஓம் கிழக்கு நோக்கனே போற்றி
ஓம் கிருத்திகை அதிபதியே போற்றி
ஓம் கிரக நாயகனே போற்றி
ஓம் கிருபாகரனே போற்றி

ஓம் குந்திக்கருளியவனே போற்றி
ஓம் குறை தீர்ப்பவனே போற்றி
ஓம் கோதுமைப் பிரியனே போற்றி
ஓம் கோணார்க்கிலருள்பவனே போற்றி
ஓம் ஞாயிறே போற்றி
ஓம் ஞாலக் காவலே போற்றி
ஓம் சனித் தந்தையே போற்றி
ஓம் சங்கராந்தி நாயகனே போற்றி
ஓம் சாட்சித் தேவனே போற்றி
ஓம் சமரிலானே போற்றி

ஓம் சிங்கக் கொடியனே போற்றி
ஓம் சிம்மராசியதிபதியே போற்றி
ஓம் சிரஞ்சீவியே போற்றி
ஓம் சிதம்பரத்தாலயமுளானே போற்றி
ஓம் சுயம்பிரகாசனே போற்றி
ஓம் சூர்ய நமஸ்காரப் பிரியனே போற்றி
ஓம் சூரியனார் ஆலயத் தேவனே போற்றி
ஓம் செம்மேனியனே போற்றி
ஓம் செம்மலர்ப்பிரியனே போற்றி
ஓம் செந்நிறக் குடையனே போற்றி

ஓம் செந்தாமரை ஏந்தியவனே போற்றி
ஓம் சூலாயுதனே போற்றி
ஓம் சோழர் மூதாதையே போற்றி
ஓம் சௌரத் தலைவனே போற்றி
ஓம் தனிக்கோயிலுளானே போற்றி
ஓம் தாமிர உலோகனே போற்றி
ஓம் தூயவனே போற்றி
ஓம் திருமேய்ச்சூரில் அருள்பவனே போற்றி
ஓம் நடுவிருப்போனே போற்றி
ஓம் நன்னிலத்தருள்பவனே போற்றி

ஓம் நலமேயளிப்பவனே போற்றி
ஓம் நளாயினிக்கருளியவனே போற்றி
ஓம் நான்முனித் தந்தையே போற்றி
ஓம் நாடப்படுபவனே போற்றி
ஓம் நீதித் தேவனே போற்றி
ஓம் நோய் தீர்ப்பவனே போற்றி
ஓம் பகற் காரணனே போற்றி
ஓம் பனையபுரத் தருள்பவனே போற்றி
ஓம் பரஞ்சோதியே போற்றி
ஓம் பரிட்சுத்துக்கருளியவனே போற்றி

ஓம் பாலைநிலத் தேவனே போற்றி
ஓம் பிரபாகரனே போற்றி
ஓம் புகழ் வாய்த்தவனே போற்றி
ஓம் புத்தியளிப்பவனே போற்றி
ஓம் மல நாசகனே போற்றி
ஓம் மதி ஒளிரச் செய்பவனே போற்றி
ஓம் மயில் வாகனனே போற்றி
ஓம் மயூரகவிக்கருளியவனே போற்றி
ஓம் முதல் கிரகமே போற்றி
ஓம் முக்கோணக் கோலனே போற்றி

ஓம் முழுமுதற் பொருளே போற்றி
ஓம் மும்மூர்த்தி அம்சமே போற்றி
ஓம் ரவிகுலத் தலைவனே போற்றி
ஓம் ருத்ரன் ப்ரத்யதிதேவதையனே போற்றி
ஓம் விடியச் செய்பவனே போற்றி
ஓம் வலிவலத்தருள்பவனே போற்றி
ஓம் ஹ்ரீம் பீஜ மந்திரனே போற்றி
ஓம் சூரியநாராயணனே போற்றி

Saturday, December 20, 2014

அம்மன் போற்றி

ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி
ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
ஓம் அருமறையின் வரம்பே போற்றி
ஓம் அறம் வளர்க்கும் அம்மையே போற்றி
ஓம் அரசிளங்குமரியே போற்றி
ஓம் அப்பர்பிணி மருந்தே போற்றி
ஓம் அமுத நாயகியே போற்றி
ஓம் அருந்தவ நாயகியே போற்றி
ஓம் அருள்நிறை அம்மையே போற்றி
ஓம் ஆலவாய்க் கரசியே போற்றி

ஓம் ஆறுமுகத்தின் அன்னையே போற்றி
ஓம் ஆதியின் பாதியே போற்றி
ஓம் ஆலால சுந்தரியே போற்றி
ஓம் ஆனந்தவல்லியே போற்றி
ஓம் இளவஞ்சிக் கொடியே போற்றி
ஓம் இமயத்தரசியே போற்றி
ஓம் இடபத்தோன் துணையே போற்றி
ஓம் ஈசுவரியே போற்றி
ஓம் உயிர் ஓவியமே போற்றி
ஓம் உலகம்மையே போற்றி

ஓம் ஊழிவினை தீர்ப்பாய் போற்றி
ஓம் எண்திசையும் வென்றோய் போற்றி
ஓம் ஏகன் துணையே போற்றி
ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி
ஓம் ஐயம் தீர்ப்பாய் போற்றி
ஓம் ஒப்பிலா அமுதே போற்றி
ஓம் ஓங்கார சுந்தரியே போற்றி
ஓம் கற்றோர்க் கினியோய் போற்றி
ஓம் கல்லோர்க்கும் எளியோய் போற்றி
ஓம் கடம்பவன சுந்தரியே போற்றி

ஓம் கல்யாண சுந்தரியே போற்றி
ஓம் கனகமணிக் குன்றே போற்றி
ஓம் கற்பின் அரசியே போற்றி
ஓம் கருணையூற்றே போற்றி
ஓம் கல்விக்கு வித்தே போற்றி
ஓம் கனகாம்பிகையே போற்றி
ஓம் கதிரொளிச் சுடரே போற்றி
ஓம் கற்பனை கடந்த கற்பகமே போற்றி
ஓம் காட்சிக்கினியோய் போற்றி
ஓம் காலம் வென்ற கற்பகமே போற்றி

ஓம் கிளியேந்திய கரத்தோய் போற்றி
ஓம் குலச்சிறை காத்தோய் போற்றி
ஓம் குற்றம் பொறுக்கும் குணமே போற்றி
ஓம் கூடற்கலாப மயிலே போற்றி
ஓம் கோலப் பசுங்கிளியே போற்றி
ஓம் சம்பந்தன் ஞானத்தாயே போற்றி
ஓம் சக்தி வடிவே போற்றி
ஓம் சங்கம் வளர்த்தாய் போற்றி
ஓம் சிவகாம சுந்தரியே போற்றி
ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி

ஓம் சிவயோக நாயகியே போற்றி
ஓம் சிவாநந்த வல்லியே போற்றி
ஓம் சிங்கார வல்லியே போற்றி
ஓம் செந்தமிழ் தாயே போற்றி
ஓம் செல்வத்துக்கரசியே போற்றி
ஓம் சேனைத் தலைவியே போற்றி
ஓம் சொக்கர் நாயகியே போற்றி
ஓம் சைவநெறி நிலைக்கச் செய்தோய் போற்றி
ஓம் ஞானாம்பிகையே போற்றி
ஓம் ஞானப் பூங்கோதையே போற்றி

ஓம் தமிழர் குலச்சுடரே போற்றி
ஓம் தண்டமிழ்த் தாயே போற்றி
ஓம் திருவுடையம்மையே போற்றி
ஓம் திசையெல்லாம் புரந்தாய் போற்றி
ஓம் திரிபுர சுந்தரியே போற்றி
ஓம் திருமலை நாயகியே போற்றி
ஓம் தீந்தமிழ்ச் சுவையே போற்றி
ஓம் தெவிட்டாத தெள்ளமுதே போற்றி
ஓம் தென்னவன் செல்வியே போற்றி
ஓம் தேன்மொழியம்மையே போற்றி

ஓம் தையல்நாயகியே போற்றி
ஓம் நற்கனியின் சுவையே போற்றி
ஓம் நற்றவத்தின் கொழுந்தே போற்றி
ஓம் நல்ல நாயகியே போற்றி
ஓம் நீலாம்பிகையே போற்றி
ஓம் நீதிக்கரசியே போற்றி
ஓம் பக்தர்தம் திலகமே போற்றி
ஓம் பழமறையின் குருந்தே போற்றி
ஓம் பரமானந்தப் பெருக்கே போற்றி
ஓம் பண்ணமைந்த சொல்லே போற்றி

ஓம் பவளவாய்க் கிளியே போற்றி
ஓம் பல்லுயிரின் தாயே போற்றி
ஓம் பசுபதி நாயகியே போற்றி
ஓம் பாகம் பிரிய அம்மையே போற்றி
ஓம் பாண்டிமாதேவியின் தேவே போற்றி
ஓம் பார்வதி அம்மையே போற்றி
ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி
ஓம் பெரிய நாயகியே போற்றி
ஓம் பொன் மயிலம்மையே போற்றி
ஓம் பொற்கொடி அன்னையே போற்றி

ஓம் மலையத்துவசன் மகளே போற்றி
ஓம் மங்கல நாயகியே போற்றி
ஓம் மழலைக் கிளியே போற்றி
ஓம் மனோன் மணித் தாயே போற்றி
ஓம் மண் சுமந்தோன் மாணிக்கமே போற்றி
ஓம் மாயோன் தங்கையே போற்றி
ஓம் மாணிக்க வல்லியே போற்றி
ஓம் மீனவர்கோன் மகளே போற்றி
ஓம் மீனாட்சி அம்மையே போற்றி
ஓம் முழுஞானப் பெருக்கே போற்றி

ஓம் முக்கண் சுடர் விருந்தே போற்றி
ஓம் யாழ் மொழியம்மையே போற்றி
ஓம் வடிவழகம்மையே போற்றி
ஓம் வேலனுக்கு வேல் தந்தோய் போற்றி
ஓம் வேத நாயகியே போற்றி
ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி
ஓம் அம்மையே அம்பிகையே போற்றி
ஓம் அங்கையற்கண் அம்மையே போற்றி போற்றி

Friday, December 19, 2014

திருமால் போற்றி

திருமால் போற்றி
ஓம் அப்பா போற்றி
ஓம் அறமே போற்றி
ஓம் அருளே போற்றி
ஓம் அச்சுதா போற்றி
ஓம் அரவ சயனா போற்றி
ஓம் அரங்கமா நகராய் போற்றி
ஓம் அற்புத லீலா போற்றி
ஓம் அறுமுகனின் அம்மான் போற்றி
ஓம் அனுமந்தன் தேவே போற்றி
ஓம் ஆதியே அனாதி போற்றி
ஓம் ஆழ்வார்கன் தொழுவாய் போற்றி
ஓம் ஆதி மூலனே போற்றி
ஓம் ஆபத்துச் சகாயா போற்றி
ஓம் ஆனைக்கும் அருள்வாய் போற்றி
ஓம் ஆனந்த மூர்த்தியே போற்றி
ஓம் உமையம்மை அண்ணா போற்றி
ஓம் உலகெலாம் காப்பாய் போற்றி
ஓம் உத்தமர் தொழுவாய் போற்றி
ஓம் உம்பருக் கருள்வாய் போற்றி
ஓம் எங்குமே நிறைந்தாய் போற்றி
ஓம் எண்குண சீலா போற்றி
ஓம் ஏழை பங்காளா போற்றி
ஓம் எழில் நிறவண்ணா போற்றி
ஓம் எழில்மிகு தேவே போற்றி
ஓம் கலியுக வரதா போற்றி
ஓம் கண்கண்ட தேவே போற்றி
ஓம் கருட வாகனனே போற்றி
ஓம் கல்யாண மூர்த்தி போற்றி
ஓம் காமரு தேவே போற்றி
ஓம் காலனைத் தவிர்ப்பாய் போற்றி
ஓம் கோக்களைக் காத்தாய் போற்றி
ஓம் கோவிந்தா முகுந்தா போற்றி
ஓம் சர்வலோகேசா போற்றி
ஓம் சாந்தகுண சீலா போற்றி
ஓம் சீனிவாசா போற்றி
ஓம் சிங்கார மூர்த்தி போற்றி
ஓம் சிக்கலை யறுப்பாய் போற்றி
ஓம் சிவபிரான் மகிழ்வாய் போற்றி
ஓம் தவசிகள் தொழுவாய் போற்றி
ஓம் தரணியைக் காப்பாய் போற்றி
ஓம் திருமகள் மணாளா போற்றி
ஓம் திருமேனி உடையாய் போற்றி
ஓம் திருவேங்கடவா போற்றி
ஓம் தருமலைக் கொழுந்தே போற்றி
ஓம் திருத்துழாய் அணிவாய் போற்றி
ஓம் தீந்தமிழ் அருள்வாய் போற்றி
ஓம் கடலமு தளித்தாய் போற்றி
ஓம் நந்தகோ பாலா போற்றி
ஓம் நான்முகன் பிதாவே போற்றி
ஓம் நாரதர் துதிப்பாய் போற்றி
ஓம் நவமணி தரிப்பாய் போற்றி
ஓம் நரசிம்ம தேவே போற்றி
ஓம் நான்மறை தொழுவாய் போற்றி
ஓம் பாற்கடல் கிடந்தாய் போற்றி
ஓம் பாவலர் பணிவாய் போற்றி
ஓம் தசாவ தாரா போற்றி
ஓம் தயாநிதி ராமா போற்றி
ஓம் தந்தைசொல் காத்தாய் போற்றி
ஓம் தவக்கோலம் பூண்டாய் போற்றி
ஓம் பட்டத்தைத் துறந்தாய் போற்றி
ஓம் பரதனுக் கீந்தாய் போற்றி
ஓம் பாண்டவர் துணைவா போற்றி
ஓம் பரந்தாமா கண்ணா போற்றி
ஓம் பாஞ்சாலி மானம் காத்தாய் போற்றி
ஓம் பார்புகழ் தேவே போற்றி
ஓம் புண்ணய மூர்த்தி போற்றி
ஓம் புலவர்கள் புகழ்வாய் போற்றி
ஓம் வாமன வரதா போற்றி
ஓம் உலகினை அளந்தாய் போற்றி
ஓம் பிரகலாதன் பணிவாய் போற்றி
ஓம் பரகதி அருள்வாய் போற்றி
ஓம் துருவனும் தொழுவாய் போற்றி
ஓம் துருவநிலை தந்தாய் போற்றி
ஓம் சபரியின் கனியே போற்றி
ஓம் நற்கதி தந்தாய் போற்றி
ஓம் வையகம் புகழ்வாய் போற்றி
ஓம் வைகுண்ட வாசா போற்றி
ஓம் முழுமதி வதனா போற்றி
ஓம் மும்மலம் அறுப்பாய் போற்றி
ஓம் கமலக் கண்ணா போற்றி
ஓம் கலைஞான மருள்வாய் போற்றி
ஓம் கஸ்தூரி திலகா போற்றி
ஓம் கருத்தினில் அமர்வாய் போற்றி
ஓம் பவளம்போல் வாயா போற்றி
ஓம் பவப்பணி ஒழிப்பாய் போற்றி
ஓம் நான்கு புயத்தாய் போற்றி
ஓம் நற்கதி அருள்வாய் போற்றி
ஓம் சங்கு சக்கரனே போற்றி
ஓம் சன்மார்க்க மருள்வாய் போற்றி
ஓம் கோபிகள் தலைவா போற்றி
ஓம் கோபமும் தணிப்பாய் போற்றி
ஓம் வேணு கோபாலா போற்றி
ஓம் வேட்கையைத் தணிப்பாய் போற்றி
ஓம் புருடோத் தமனே போற்றி
ஓம் பொன்புகழ் அருள்வாய் போற்றி
ஓம் மாயா வினோதா போற்றி
ஓம் விஜய ராகவனே போற்றி
ஓம் வினையெலாம் ஒழிப்பாய் போற்றி
ஓம் பதும நாபனே போற்றி
ஓம் பதமலர் தருவாய் போற்றி
ஓம் பார்த்த சாரதியே போற்றி
ஓம் பார்வேந்தர் தொழுவாய் போற்றி
ஓம் கரிவரத ராஜா போற்றி
ஓம் கனிவுடன் காப்பாய் போற்றி
ஓம் சுந்தர ராஜா போற்றி
ஓம் சுகமெலாம் தருவாய் போற்றி
ஓம் அனைத்துமே ஆனாய் போற்றி
ஓம் அரி அரி நமோ நாராயணா போற்றி

Wednesday, December 17, 2014

பெருமை மிகு சிவ போற்றி. சொல்லி முக்தி பெறுவோம்

ஓம் அம்மையே அப்பா போற்றி
ஓம் அளப்பிலா அருளே போற்றி
ஓம் அன்பெனும் மலையே போற்றி
ஓம் அடியார்கள் துணையே போற்றி
ஓம் அணுவினுள் அணுவே போற்றி
ஓம் அண்டங்கள் கடந்தாய் போற்றி
ஓம் அகரமே அறிவே போற்றி
ஓம் அறிந்திடு மொழியே போற்றி
ஓம் அகத்தனே போற்றி போற்றி!
ஓம் அலைகடல் விரிவே போற்றி
ஓம் அழகனாம் அமுதே போற்றி
ஓம் அரும்பிறை அணிந்தாய் போற்றி
ஓம் அவிரொளி சடையாய் போற்றி
ஓம் அகஞ்சுடர் விளக்கே போற்றி
ஓம் அகந்தை நோய் அழிப்பாய் போற்றி
ஓம் அருமறை முடிவே போற்றி
ஓம் அருந்தவர் நினைவே போற்றி
ஓம் அரஹரா போற்றி போற்றி
ஓம் ஆதியே அருளே போற்றி
ஓம் ஆலால கண்டா போற்றி
ஓம் ஆதாரப் பொருளே போற்றி
ஓம் ஆலமர் குருவே போற்றி
ஓம் ஆலவாய் அப்பா போற்றி
ஓம் ஆரூரின் தியாகா போற்றி
ஓம் ஆடிடும் கூத்தா போற்றி
ஓம் ஆடரவு அணியாய் போற்றி
ஓம் ஆற்றலே போற்றி போற்றி!
ஓம் இமையவர் உளத்தாய் போற்றி
ஓம் இருட்கறை மிடற்றாய் போற்றி
ஓம் இருவினை தவிர்ப்பாய் போற்றி
ஓம் இரக்கமே வடிவாய் போற்றி
ஓம் இனியசெந் தமிழே போற்றி
ஓம் இலக்கியச் செல்வா போற்றி
ஓம் இமயவள் பங்கா போற்றி
ஓம் இன்னல்கள் களைவாய் போற்றி
ஓம் இறைவனே போற்றி போற்றி!
ஓம் இதயத்தே கனிவாய் போற்றி
ஓம் இனிமையே நிறைப்பாய் போற்றி
ஓம் இனியவர் மனத்தாய் போற்றி
ஓம் இடபவா கனத்தாய் போற்றி
ஓம் ஈடிலாப் பிரானே போற்றி
ஓம் ஈந்தருள் தேவே போற்றி
ஓம் ஈமத்தே குனிப்பாய் போற்றி
ஓம் ஈசானத் திறையே போற்றி
ஓம் ஈசனே போற்றி போற்றி!
ஓம் உலகிதன் முதலே போற்றி
ஓம் உமையொரு பாகா போற்றி
ஓம் உள்ளொளிர் சுடரே போற்றி
ஓம் உணவொடு நீரே போற்றி
ஓம் உடுக்கையின் ஒலியே போற்றி
ஓம் உடைகரித் தோலாய் போற்றி
ஓம் உரைகடந் தொளிர்வாய் போற்றி
ஓம் உருவொடும் அருவே போற்றி
ஓம் உடையனே போற்றி போற்றி!
ஓம் ஊரெல்லாம் உவப்பாய் போற்றி
ஓம் ஊழினை விதிப்பாய் போற்றி
ஓம் ஊங்கார ஒலியே போற்றி
ஓம் ஊக்கமே உணர்வே போற்றி
ஓம் எல்லையில் எழிலே போற்றி
ஓம் எரிதவழ் விழியாய் போற்றி
ஓம் எண்குண வடிவே போற்றி
ஓம் எருதேறும் ஈசா போற்றி
ஓம் எம்பிரான் போற்றி போற்றி
ஓம் ஏகநா யகனே போற்றி
ஓம் ஏதிலார் புகலே போற்றி
ஓம் ஏத்துவார் ஏத்தே போற்றி
ஓம் ஏர்முனைச் செவ்வா போற்றி
ஓம் ஏந்துகூர் மழுவாய் போற்றி
ஓம் ஏகம்பா இறைவா போற்றி
ஓம் ஏக்கமே களைவாய் போற்றி
ஓம் ஏற்றமே தருவாய் போற்றி
ஓம் ஏந்தலே போற்றி போற்றி
ஓம் ஐயனே அரனே போற்றி
ஓம் ஐம்பூத வடிவே போற்றி
ஓம் ஐம்புலன் அவிப்பாய் போற்றி
ஓம் ஐயங்கள் களைவாய் போற்றி
ஓம் ஒப்பிலா மணியே போற்றி
ஓம் ஒளியெறி நுதலாய் போற்றி
ஓம் ஒள்ளிழை பாகா போற்றி
ஓம் ஒண்குழைக் காதா போற்றி
ஓம் ஒப்பிலாய் போற்றி போற்றி!
ஓம் ஓதுவார் உளத்தாய் போற்றி
ஓம் ஓதிடும் பொருளே போற்றி
ஓம் ஓய்விலாக் கூத்தா போற்றி
ஓம் ஓமென்னும் பொருளே போற்றி
ஓம் ஓசையின் ஒலியே போற்றி
ஓம் ஓர்மையின் உள்ளே போற்றி
ஓம் ஓதுசெந் தமிழே போற்றி
ஓம் ஓதிடும் பண்ணே போற்றி
ஓம் ஓய்விலாய் போற்றி போற்றி!
ஓம் கறைதிகழ் கண்டா போற்றி
ஓம் காலனைக் கடிந்தாய் போற்றி
ஓம் காமனை எரித்தாய் போற்றி
ஓம் கந்தனைத் தந்தாய் போற்றி
ஓம் கங்கைவாழ் சடையாய் போற்றி
ஓம் கண்ணப்பர் முதலே போற்றி
ஓம் கண்கள்மூன் றுடையாய் போற்றி
ஓம் கருணைமா கடலே போற்றி
ஓம் கடவுளே போற்றி போற்றி!
ஓம் சிவமெனும் பொருளே போற்றி
ஓம் செவ்வொளி வடிவே போற்றி
ஓம் தவநிலை முடிவே போற்றி
ஓம் தண்பதம் தருவாய் போற்றி
ஓம் பவமெலாம் தவிர்ப்பாய் போற்றி
ஓம் பரமெனும் பொருளே போற்றி
ஓம் புலியூரான் உளத்தாய் போற்றி
ஓம் புவிபுரந் தருள்வாய் போற்றி
ஓம் புண்ணியா போற்றி போற்றி!

Monday, December 1, 2014

108 சிவ போற்றி

ஓம் அப்பா போற்றி
ஓம் அரனே போற்றி
ஓம் அரசே போற்றி
ஓம் அமுதே போற்றி
ஓம் அழகே போற்றி
ஓம் அத்தா போற்றி
ஓம் அற்புதா போற்றி
ஓம் அறிவா போற்றி
ஓம் அம்பலா போற்றி
ஓம் அரியோய் போற்றி
ஓம் அருந்தவா போற்றி
ஓம் அணுவே போற்றி
ஓம் அண்டா போற்றி
ஓம் ஆதியே போற்றி
ஓம் ஆறங்கா போற்றி
ஓம் ஆரமுதே போற்றி
ஓம் ஆரணா போற்றி
ஓம் ஆலவாயா போற்றி
ஓம் ஆரூரா போற்றி
ஓம் இறைவா போற்றி
ஓம் இடபா போற்றி
ஓம் இன்பா போற்றி
ஓம் ஈசா போற்றி
ஓம் உடையாய் போற்றி
ஓம் உணர்வே போற்றி
ஓம் உயிரே போற்றி
ஓம் ஊழியே போற்றி
ஓம் எண்ணே போற்றி
ஓம் எழுத்தே போற்றி
ஓம் எண்குணா போற்றி
ஓம் எழிலா போற்றி
ஓம் எளியா போற்றி
ஓம் ஏகா போற்றி
ஓம் ஏழிசையே போற்றி
ஓம் ஏகாந்தா போற்றி
ஓம் ஐயா போற்றி
ஓம் ஒருவனே போற்றி
ஓம் ஒப்பிலா போற்றி
ஓம் ஒளியே போற்றி
ஓம் ஒலியே போற்றி
ஓம் ஓங்காரா போற்றி
ஓம் கடம்பா போற்றி
ஓம் கதிரே போற்றி
ஓம் கனியே போற்றி
ஓம் கலையே போற்றி
ஓம் காருண்யா போற்றி

ஓம் குறியே போற்றி
ஓம் குருவே போற்றி
ஓம் குணமே போற்றி
ஓம் கூத்தா போற்றி
ஓம் கடையே போற்றி
ஓம் சங்கரா போற்றி
ஓம் சதுரா போற்றி
ஓம் சதாசிவா போற்றி
ஓம் சிவமே போற்றி
ஓம் சிறமே போற்றி
ஓம் சித்தமே போற்றி
ஓம் சீரா போற்றி
ஓம் சுடரே போற்றி
ஓம் சுந்தரா போற்றி
ஓம் செல்வா போற்றி
ஓம் செங்கணா போற்றி
ஓம் செம்பொணா போற்றி
ஓம் சொல்லே போற்றி
ஓம் ஞாயிறே போற்றி
ஓம் ஞானமே போற்றி
ஓம் தமிழே போற்றி
ஓம் தத்துவா போற்றி
ஓம் தலைவா போற்றி
ஓம் தந்தையே போற்றி
ஓம் தாயே போற்றி
ஓம் தாண்டவா போற்றி
ஓம் திங்களே போற்றி
ஓம் திசையே போற்றி
ஓம் திரிசூலா போற்றி
ஓம் துணையே போற்றி
ஓம் தெளிவே போற்றி
ஓம் தேவ தேவா போற்றி
ஓம் தோழா போற்றி
ஓம் நமசிவாயா போற்றி
ஓம் நண்பா போற்றி
ஓம் நஞ்சுண்டா போற்றி
ஓம் நன்மறையா போற்றி
ஓம் நிறைவா போற்றி
ஓம் நினைவே போற்றி
ஓம் நீலகண்டா போற்றி
ஓம் நெறியே போற்றி
ஓம் பண்ணே போற்றி
ஓம் பித்தா போற்றி
ஓம் புனிதா போற்றி
ஓம் புராணா போற்றி
ஓம் பெரியோய் போற்றி
ஓம் பொருளே போற்றி
ஓம் பொங்கரவா போற்றி
ஓம் மணியே போற்றி
ஓம் மதிசூடியே போற்றி
ஓம் மருந்தே போற்றி
ஓம் மலையே போற்றி
ஓம் மஞ்சா போற்றி
ஓம் மணாளா போற்றி
ஓம் மெய்யே போற்றி
ஓம் முகிலே போற்றி
ஓம் முத்தா போற்றி
ஓம் முதல்வா போற்றி
ஓம் வாழ்வே போற்றி
ஓம் வைப்பே போற்றி
ஓம் சிவபிரானே போற்றி ! போற்றி!

Sunday, November 30, 2014

விரோதிகளை அடங்கச் செய்யவும், எதிரிகள் உருவாகாமல் தடுப்பதற்கும் ஓத வேண்டிய பதிகம்



பாடியவர்: மாணிக்கவாசகர் தலம்: தில்லை

வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
உளைந்தனமுப்புரம் உந்தீ பற
ஒருங்குடன் வெந்தவா றுந்தீ பற

ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில்
ஓரம்பே முப்புரம் உந்தீ பற
ஒன்றும் பெருமிகை றுந்தீ பற

தச்சு விடுத்தலும் தாம் அடியிட்டலும்
அச்சு முறிந்ததென்று உந்தீ பற
அழிந்தன முப்புரம் உந்தீ பற

உய்யவல்லார் ஒருமூவரைக் காவல் கொண்டு
எய்ய வல்லானுக்கே உந்தீ பற
இளமுலை பங்கன் என்றுந்தீ பற

சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள்
ஓடியவா பாடி உந்தீ பற
உருத்திர நாதனுக் குந்தீ பற

ஆவா திருமால் அவிப்பாகங் கொண்டு அன்று
சாவாது இருந்தான் என்று (உ)ந்தீ பற
சதுர்முகன் தாதை என்று (உ)ந்தீ பற

புரந்தரனார் ஒரு பூங்குயிலாகி
மரந்தினில் ஏறினார் (உ)ந்தீ பற
வானவர் கோன் என்றே உந்தீ பற

வெஞ்சின வேள்வி வியாத்திர னார்தலை
துஞ்சின வாபாடி உந்தீ பற
தொடர்ந்த பிறப்பற உந்தீ பற

ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக்
கூட்டிய வாபாடி உந்தீ பற
கொங்கை குலுங்கநின்று (உ)ந்தீ பற

உண்ணப் புகுந்த பகன்ஒளித்து ஓடாமே
கண்ணைப் பறித்தவாறு (உ)ந்தீ பற
கருக்கெட நாமெலாம் உந்தீ பற

நாமகள் நாசி சிரம்பிர மன்படச்
சோமன் முகம்நெரித்து (உ)ந்தீ பற
தொல்லை வினைகெட உந்தீ பற

நான்மறை யோனும் மகத்துஇய மான்படப்
போம்வழி தேடுமாறு (உ)ந்தீ பற
புரந்தரன் வேள்வியில் (உ)ந்தீ பற

சூரிய னார் தொண்டை வாயினிற் பற்களை
வாரி நெரித்தவாறு (உ)ந்தீ பற
மயங்கிற்று வேள்வி என்று (உ)ந்தீ பற

தக்கனார் அன்றே தலைஇழந் தார்தக்கன்
மக்களைச் சூழநின்று (உ)ந்தீ பற
மடிந்தது வேள்வி என்று (உ)ந்தீ பற

பாலக னார்க்குஅன்று பாற்கடல் ஈந்திட்ட
கோலச் சடையற்கே உந்தீ பற
குமரன் தன் தாதைக்கே உந்தீ பற

நல்ல மலரின்மேல் நான்முக னார்தலை
ஒல்லை அரிந்ததுஎன்று (உ)ந்தீ பற
உகிரால் அரிந்ததுஎன்று (உ)ந்தீ பற

தேரை நிறுத்தி மலைஎடுத் தான்சிரம்
ஈரைந்தும் இற்றவாறு (உ)ந்தீ பற
இருபதும் இற்றதென்று (உ)ந்தீ பற

ஏகாசமிட்ட இருடிகள் போகாமல்
ஆகாசங் காவலென் றுந்தீ பெற
அகற் கப்பாலுங் காவல் என்றுந்தீ பற

திருச்சிற்றம்பலம்

Tuesday, November 25, 2014

முருகன் 108 போற்றி

முருகனின் 108 போற்றி

ஓம் முத்தமிழ் வடிவே முதல்வா போற்றி
ஓம் அகத்தியருக்கு அருளினோய் போற்றி
ஓம் அமரரைக் காத்தாய் போற்றி
ஓம் அருணகிரிக்கு அருள்வோய் போற்றி
ஓம் அழகர் மலையோய் போற்றி
ஓம் ஆறுமுகன் ஆனவனே போற்றி
ஓம் ஆண்டிக் கோலமே போற்றி
ஓம் ஆறுபடை வீடுடையாய் போற்றி
ஓம் ஆறெழுத்து மந்திரம் போற்றி
ஓம் இடும்பனை ஏற்றாய் போற்றி
ஓம் இளங்குமர ஏந்தலே போற்றி
ஓம் உலகை வலம் வந்தாய் போற்றி
ஓம் உருகும் அடியார் உளமே போற்றி
ஓம் எட்டிக்குடி அழகா போற்றி
ஓம் எண் கண் இறைவா போற்றி
ஓம் என்றும் இளையாய் போற்றி
ஓம் ஏரகத்து அரசே போற்றி
ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி
ஓம் ஓங்காரப் பொருளே போற்றி
ஓம் ஒளவைக்கு அருளினாய் போற்றி
ஓம் கதிர்காம அருவமே போற்றி
ஓம் கந்த சுவாமியே போற்றி
ஓம் கந்தகிரிக் கடம்பே போற்றி
ஓம் கந்தகோட்டக் கடவூளே போற்றி
ஓம் களிற்றூர்திப் பெருமானே போற்றி
ஓம் கழுகுமலைக் கந்தா போற்றி
ஓம் கன்னித்தமிழ் முருகா போற்றி
ஓம் கார்த்திகேயன் கருணையே போற்றி
ஓம் காவடிப் பிரியோய் போற்றி
ஓம் கிரவூஞ்ச பேதனா போற்றி
ஓம் குடைந்தைக் குமரா போற்றி
ஓம் குமாரக் கடவூளே போற்றி
ஓம் குறிஞ்சித் தலைவா போற்றி
ஓம் குழந்தை வேலனே போற்றி
ஓம் குன்றக் குடியாய் போற்றி
ஓம் குன்றுதோறாடும் குமரனே போற்றி
ஓம் கூடற் குமரா போற்றி
ஓம் கொடுங்குன்றுக் கோமானே போற்றி
ஓம் கொடுமள+ர்ப் ப+மானே போற்றி
ஓம் கொல்லிமலை வேடனே போற்றி
ஓம் கோவணப் பண்டாரமே போற்றி
ஓம் கௌமாரத் தலைவா போற்றி
ஓம் ஞான சக்திதரனே போற்றி
ஓம் ஞான தண்டாயூதபாணியே போற்றி
ஓம் சக்திவேல் பெற்றாய் போற்றி
ஓம் சங்கத் தலைவா போற்றி
ஓம் சடாட்சர மந்திரமே போற்றி
ஓம் சரவண பவனே போற்றி
ஓம் சண்முகத்து அரசே போற்றி
ஓம் சதாசிவ மைந்தா போற்றி
ஓம் சச்டி விரதம் போற்றி
ஓம் சிங்கமுகனை வென்றாய் போற்றி
ஓம் சிங்கார வேலனே போற்றி
ஓம் சிகி வாகனா போற்றி
ஓம் சிவகிரிச் செல்வா போற்றி
ஓம் சுப்பிர மணியாய் போற்றி
ஓம் சு+ரனை வென்றௌய் போற்றி
ஓம் சென்னிமலைச் செல்வா போற்றி
ஓம் சேவற் கொடியாய் போற்றி
ஓம் சேனாதிபதிச் செவ்வேளே போற்றி
ஓம் சைவக் கொழுந்தே போற்றி
ஓம் தார காந்தகா போற்றி
ஓம் திருச்செந்தூர் வாழவே போற்றி
ஓம் திருப்பரங் குன்றௌய் போற்றி
ஓம் திருப்புகழ் பெற்றௌய் போற்றி
ஓம் திருப்போரூத் தேவா போற்றி
ஓம் திருமாலின் மருகா போற்றி
ஓம் திருத்தணி முருகா போற்றி
ஓம் திருவருள் தருவாய் போற்றி
ஓம் திருவிடைக்கழித் தலைவா போற்றி
ஓம் திருவினும் திருவே போற்றி
ஓம் தித்திக்கும் உருவே போற்றி
ஓம் திவ்விய ரூபனே போற்றி
ஓம் தேனாற்றுக் குரிசிலே போற்றி
ஓம் தேவா சேனாபதியே போற்றி
ஓம் தேவயானை கணவா போற்றி
ஓம் தேவாதி தேவனே போற்றி
ஓம் நக்கீரனைக் காத்தாய் போற்றி
ஓம் நந்தா விளக்கே போற்றி
ஓம் நவவீர நாயகனே போற்றி
ஓம் பராசக்தி பாலனே போற்றி
ஓம் பழநிமலை வேலனே போற்றி
ஓம் பழமுதிர் சோலையாய் போற்றி
ஓம் பன்னிரு கரத்தோய் போற்றி
ஓம் பாலசுப்பிரமணியா் போற்றி
ஓம் பிரம்மனைக் குட்டினோய் போற்றி
ஓம் பிரம்ம சாத்தனே போற்றி
ஓம் பொன்னார் திருவடியே போற்றி
ஓம் மயிலேறும் மாணிக்கமே போற்றி
ஓம் மயிலம் மலையரசே போற்றி
ஓம் மய+ரகிரிக் கோவே போற்றி
ஓம் மலையேறும் வள்ளலே போற்றி
ஓம் மலையைப் பிளந்தோய் போற்றி
ஓம் மனதைக் கவர்ந்தோய் போற்றி
ஓம் முருகெனும் அழகே போற்றி
ஓம் முத்தைய ரத்தினமே போற்றி
ஓம் வடிவேலைப் பெற்றௌய் போற்றி
ஓம் வள்ளி மணாளனே போற்றி
ஓம் வள்ளிமைல வள்ளலே போற்றி
ஓம் வயலூரின் வாழ்வே போற்றி
ஓம் விசாகத்து ஓளியே போற்றி
ஓம் விருத்தனாய் நின்றாய் போற்றி
ஓம் வீரபாகு சோதரா போற்றி
ஓம் வேடனாய் வந்தாய் போற்றி
ஓம் வேத மந்திரமே போற்றி
ஓம் வேத மந்திரமே போற்றி
ஓம் வையாபுரிக் கரசே போற்றி
ஓம் யெகசோதிப் பெருமாளே போற்றி.

Friday, September 26, 2014

கபீர்தாசர்

கபீர்தாசர்,

கபீர் என்ற ஒரு இஸ்லாமிய நெசவாளருக்கு ராமன் மேல் அளவிட முடியாத பக்தி. அதனால் திருமந்திர உபதேசம்(ராம நாம தீட்சை) பெற ராமானந்தர் என்ற குருவை அணுகினார். அந்த குருவின் சிஷ்யர்கள் அவரை அடிச்து விரட்டி விட்டனர். பிறகு பல முறை இவ்வாறே அடித்து விரட்டப்பட்டார் கபீர் தாசர்.

அதனால் ராமானந்தர் கங்கைக்கு குளிக்க போகும்போது விடியற்காலையில் படிக்கட்டில் படுத்துக்கொண்டார். ராமானந்தர் தனது கால் ஒரு மனிதன் மேல் பட்டதும் ராம, ராம என்று சொல்லி காலை எடுத்துக்கொண்டார். குருவின் பாத தீட்சையும் ஆச்சு, குருவின் அருளும் ஆச்சு. மந்திர தீட்சையும் ஆச்சு என்று மகிழ்ந்த கபீர்தாசர் =அன்று முதல் ராம நாமம் ஜெபம் செய்ய ஆரம்பித்தார்.

ராமனை தன்னுள் உணர்ந்தார்.
அவரின் பிரபலமான பாடல் ஒன்று

நீர்த்துளி கடலில் அடங்கும் என்பதை யாரும் அறிவார்கள். நீர்த்துளிக்குள் கடல் அடங்கும் என்பதை யாரும் அறியார்கள்.

அதாவது உலகம் இறைவனின் படைப்பு என்பதை யாரும் அறிவார்கள். இந்த இறைவனின் படைப்பாகிய தொண்டர் உள்ளத்துள்ளே இறைவனே அடக்கம் என்பதை யாரும் அறியார்கள். என்று பாடுகிறார். இது பராபக்தி எனப்படும். இந்த பாடலை முதல் இழையிலேயே சொல்லியிருக்கிறேன்

பல முறை விவாதத்தில் ராமும், ரஹீமும் ஒன்று என்று சொல்ல்யிருக்கிறார். கோரக்கரை விவாதத்தில் ஜெயித்திருக்கீறார்.

அவரது பாடல்களை இனிமேல் பகிர்ந்து கொள்கிறேன்.

அவர் மெக்கா புனதப்பயனத்தில் முக்தி அடைந்தார். வட இந்தியா முழுக்க ராம நாமத்தை பரப்பினவர் க்பீர்தாஸர்.

Tuesday, August 26, 2014

நன்மை வளரும் பதிகம்

பரிகாரம்: சிவபெருமானை வழிபடுவதால் வாழ்வில் கஷ்டம் குறைந்து நன்மை வளரும்.
பாட வேண்டிய பாடல்

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே.

நமச்சி வாயவே ஞானமுங் கல்வியும்
நமச்சி வாயவே நானறி விச்சையும்
நமச்சி வாயவே நாநவின் றேத்துமே
நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே.

ஆளா காராளா னாரை அடைந்துய்யார்
மீளா வாட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார்
தோளா தசுரை யோதொழும் பர்செவி
வாளா மாய்ந்துமண் ணாகிக் கழிவரே.
தோளாத சுரையென்பது துவாரமிடாத சுரைக்காய்

நடலை வாழ்வுகொண் டென்செய்திர் நாணிலீர்
சுடலை சேர்வது சொற்பிர மாணமே
கடலின் நஞ்சமு துண்டவர் கைவிட்டால்
உடலி னார்கிடந் தூர்முனி பண்டமே.

பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார்
நாக்கைக் கொண்டரன் நாமம் நவில்கிலார்
ஆக்கைக் கேயிரை தேடி அலமந்து
காக்கைக் கேயிரை யாகிக் கழிவரே.

குறிக ளுமடை யாளமுங் கோயிலும்
நெறிக ளுமவர் நின்றதோர் நேர்மையும்
அறிய ஆயிரம் ஆரணம் ஓதிலும்
பொறியி லீர்மன மென்கொல் புகாததே.

வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்தச் சென்னியுந் தந்த தலைவனைச்
சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே.

எழுது பாவைநல் லார்திறம் விட்டுநான்
தொழுது போற்றிநின் றேனையுஞ் சூழ்ந்துகொண்
டுழுத சால்வழி யேயுழு வான்பொருட்
டிழுதை நெஞ்சமி தென்படு கின்றதே.

நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும்பொன் னார்சடைப் புண்ணியன்
பொக்க மிக்கவர் பூவுநீ ருங்கண்டு
நக்கு நிற்ப ரவர்தமை நாணியே.

விறகிற் றீயினன் பாலிற் படுநெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
உறவு கோல்நட் டுணர்வு கயிற்றினான்
முறுக வாங்கிக் கடையமுன் னிற்குமே.


Tuesday, August 12, 2014

தேவாரப்பாடல் . ஜோதியில் கலக்க

http://sivanpaattu.blogspot.in/2008/11/blog-post_11.html

இந்த தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது. அருமையாக எழுதியிருக்கிறார்கள்

திருநல்லூர் திருத்தலத்தில் நம்பியாண்டார் நம்பிகளின் திருமகளைத் திருமணம் செய்து கொண்டபின், மனைவியின் கையைப் பிடித்துக் கொண்டு அங்குள்ள அனைவரையும் அழைத்துக்கொண்டு 'நல்லூர் பெருமணம்' என்ற பதிகத்தைப் பாடிக் கொண்டே கோயிலுக்குள் நுழைந்தவுடன், ஈசன் அருளால் கர்ப்பகிரகத்தில் ஒரு ஜோதி தோன்றியது . அப்பொழுது இந்த 'காதலாகிக் கசிந்து' என்ற நமச்சிவாயப் பதிகத்தைப் பாடிக்கொண்டே எல்லோரையும் அந்த ஜோதியில் இரண்டறக் கலக்கச் செய்தார் அப்போது ஆளுடையப்பிள்ளையாம் அம்மையின் ஞானப்பாலுண்ட திருஞான சம்பந்தர் பாடிய நமசிவாயப்பதிகம் .


காதல் ஆகிக் கசிந்து கண்ணிர் மல்கி
ஓதுவார்தமை நன்னெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே. (1)


நம்புவார் அவர் நாவில் நவிற்றினால்
வம்பு நாண் மலர்வார் மது ஒப்பது
செம்பொனார் திலகம் உலகுக்கு எலாம்
நம்பன் நாமம் நமச்சிவாயவே. (2)


நெக்குள் ஆர்வம் மிகப் பெருகி நினைந்து
அக்கு மாலைகொடு அங்கையில் எண்ணுவார்
தக்க வானவராத் தருவிப்பது
நக்கன் நாமம் நமச்சிவாயவே. (3)


இயமன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால்
நயம் வந்து ஓத வல்லார்தமை நண்ணினால்
நியமந்தான் நினைவார்க்கு இனியான் நெற்றி
நயனன் நாமம் நமச்சிவாயவே. (4)


கொல்வார் ஏனும் குணம் பல நன்மைகள்
இல்லார் ஏனும் இயம்புவர் அயிடின்
எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால்
நல்லார் நாமம் நமச்சிவாயவே. (5)


மந்தரம் அன்ன பாவங்கள் மேவிய
பந்தனை யவர் தாமும் பகர்வரேல்
சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால்
நந்தி நாமம் நமச்சிவாயவே. (6)

நரகம் ஏழ்புக நாடினர் ஆயினும்
உரைசெய்வாயினர் ஆயின் உருத்திரர்
விரவியே புகுவித்திடும் என்பரால்
வரதன் நாமம் நமச்சிவாயவே. (7)


இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல்மேல்
தலங்கொள் கால் விரல் சங்கரன் ஊன்றலும்
மலங்கி வாய்மொழி செய்தவன் உய்வகை
நலங்கொள் நாமம் நமச்சிவாயவே. (8)

போதன் போதன கண்ணனும் அண்ணல்தன்
பாதம் தான்முடி தேடியப் பண்பராய்
யாரும் காண்பதரிதாகி அலந்தவர்
ஓதும் நாமம் நமச்சிவாயவே. (9)

கஞ்சி மண்டையர் கையில் உண் கையர்கள்
வெஞ்சொல் மிண்டர் விரவிலர் என்பரால்
விஞ்சை அண்டர்கன் வேண்ட அமுதுசெய்
நஞ்சுண் கண்டன் நமச்சிவாயவே. (10)

திருமூலர் திருமந்திரம்

சிவசிவ என்கிலர் தீவினையாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்னத் தேவரும் ஆவர்
சிவசிவ என்னச் சிவகதி தானே

Tuesday, August 5, 2014

திருமூலர் திருமந்திரம்

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதற் பூதம்
பரத்தின் மறைந்தது பார்முதற் பூதம்

மரத்தால் செய்ய்பட்ட யானையைப்பார்க்கும் போது மரம் தெரிவதில்லை. யானையே தெரிகிறது.
மரம் என்று பார்த்தால் யானை தெரியாது

அதுபோல பஞ்சபூதங்களால் ஆன படைப்புகளை பார்க்கும்போது இறைவன் தெரிவதில்லை. ஆனால் இறைவனை பார்க்கும் போது பஞ்சபூதங்களும் தெரிவதில்லை

எல்லாம் சிவமயம் என்று பார்க்கவேண்டும் என்பதே இதன் கருத்து

திருமூலர் திருமந்திரம்

Monday, August 4, 2014

குரு என்பவர் யார்?

யார் குரு என்பவர்?


தத்துவராயர் என்பவர் தன் மாமாவான ஸ்வரூபனந்தர் என்பரோடு ஞானத்தை தேடி(குருவைத்தேடி) புறப்பட்டார்கள்.

இருவ்ரும் ஒரு முடிவு எடுத்தார்கள். தனித்தனியே தேடுவது என்று. அப்பொழுது ஸ்வரூபானந்தர் இருந்த இடத்திலேயே சிவ்னைதுதித்து குருவை அடைந்தார். குரு தத்துவ உபதேசம் செய்தார். அதனால் மகிழ்நத ஸ்வருப்பானந்தர், தத்துவராயரை அழைப்பதற்குள் குரு உடலை உகுத்துவிட்டார்.

ஸ்வரூபானந்தரே தத்துவராயருக்கு உபதேசம் செய்தார். இருவரும் தன்னை அறிந்த நினையில் ஆனந்தமாக இருந்தனர்.

ஒரு பாடலின் அர்த்தம் சொன்னால் புரியும்

உடுத்த முழம் துணி இருக்கிறது. பிச்சை போட பெண்கள் இருக்கிறார்கள். குளிர்ந்த ஓடை நீரைத்தருகிறது. பிச்சாபாத்திரமாக கையே இருக்கிறது. சிவனே குறை ஒன்றும் இல்லை

இதுபோல நிறைய பாடியிருக்கிறார். தத்துவராயர் தன் குருவான ஸ்வரூபானந்தர் மேல் பரணி பாடினார்.(பரணி என்பது போரில் 1000 யானைகளக்கொன்றவர் மேல் பாடுவது). யாரையுமே கொல்லாத ஸ்வரூபானந்தர் மேல் பாடியதால் புலவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

அதற்கு தத்துவராயர் என் குருவின் சன்னதிக்கு வந்து சந்தேகம் கேளுங்கள் என்று சொன்னார். புலவர்களும் குருவின் சன்னதிக்கு வந்து அமர்ந்தார்கள்.

சத்குருவான ஸ்வரூபானந்தர் முன்னிலையில் மனம் இறந்து மார்க்கம் தெளிவானது. அப்படியே நாள் போவது கூட தெரியாமல் இருந்தார்கள். ஒருவழியாக சுயநினைவு வந்து

“அப்பா தத்துவராயா மனம் என்னும் மதயானையை அடக்கி காட்டிய உன் குருவின் மேல் பரணி மட்டும் அல்ல. அதற்கு மேலும் பாடலாம் என்று சொல்லி விடைபெற்றனர்.

நீதி:

எந்த குருவின் முன்னிலையில் மனம் இறந்து மார்க்கம் தெளிவாகிறதோ அவரே நம் சத்குரு”(இதற்கு நாமும் பக்குவமாக இருககவேண்டும்)

Thursday, July 31, 2014

பஜகோவிந்தத்தின் வரலாறு

இந்த கதை மிகவும் அருமையான கதை. பக்தி மார்க்கத்தில் மனதை ஈடுபடுத்தும்


ஆதிசங்கரர் வட இந்தியாவில் ஒரு கிராமத்துக்கு போனார். அங்கே ஒரு வயதான மனிதன் சமஸ்கிருத இலக்கணம் படித்துக்கொண்டு இருந்தார். அதில் டுக்ருஞ்கரணே என்று மனப்பாடம் செய்து கொண்டு இருந்தார்.

அதைப்பார்த்து பரிதாபப்பட்ட ஆதிசங்கரர். பஜகோவிந்தம் பாடினார்.

அதன் முதல் பாடல் அர்த்தம்

கோவிந்தனைப்பாடு,கோவிந்தனைப்பாடு,கோவிந்தனைப்பாடு மூட மனமே
(கோவிந்தன் என்றால் சைவர்கள் என்ன செய்வார்கள். ஆதி சங்கரரின் குருவின் பெயர் கோவந்தர். குருவாகிய சிவனை வணங்குங்கள் என்று அர்த்தம் செய்து கொள்ளலாம்)
சாகும் தருவாயில் டுக்ருஞ்கரணே என்ற இலக்கணப்பாடம் வந்து காப்பாற்றாது என்று பாடினார்.

இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் பக்தியே முக்திக்கு வழி. இலக்கண , இலக்கிய பாடங்கள் அறிவை வளர்க்க உதவி செய்யுமே தவிர பிறவிப்பெருங்கடல் தாண்ட உதவாது

கணாபத்யம்

கணாபத்யம்

ஓம் கம் கணபதயே நம என்னும் மந்திரத்தை சொல்லவேண்டும்.

விநாயகர் அகவல் என்ற இந்த அவ்வையார் இயற்றிய பாடலை பாராயணம் பண்ணவேண்டும்.

விநாயகரை வணங்கினால் காரியம் கைகூடும். தடைகள் அகலும். ஆன்மீகத்திலும் முன்னேறலாம்

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலஇசைப் பாடப்
பொன் அரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்ன மருங்கில் வளர்ந்து அழகுஎ றிப்பப்
பேழை வயிறும், பொரும்பாரக் கோடும் 05

வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் 10

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்ட முப்புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த தூய மெய்ஞ்ஞான
அற்புதம் நிறைந்த கற்பகக் களிறே
முப்பழம் நுகரும் மூஷிக வாகன 15

இப்பொழுது என்னை ஆட்கொள வேண்டித்
தாயாய் எனக்குத் தான் எழுந்து அருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்தே
திருந்திய முதல் ஐந்தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்துஎன் உளம்தனில் புகுந்து 20

குருவடிவு ஆகிக் குவலயம் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருள் என
வாடா வகைதான் மகிழ்ந்து எனக்கு அருளிக்
கோடா யுதத்தாற் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டிஎன் செவியில் 25

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக்கு அருளிக்
கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து
இருவினை தன்னை அறுத்துஇருள் கடிந்து 30

தலமொரு நான்கும் தந்துஎனக்கு அருளி
மலம் ஒரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறாதாரத்து அங்குச நிலையும் 35

பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே
இடைபிங் கலையின் எழுத்து அறிவித்துக்
கடையிற் கழுமுனை கபாலமும் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் 40

குண்டலி அதனில் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்து அறிவித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் 45

குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண்முகம் ஆக இனிதெனக்கு அருளி 50

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரிஎட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிதுஎனக் கருளி
என்னை அறிவித்து எனக்கருள் செய்து 55

முன்னை வினையின் முதலைக் களைந்தே
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி இரண்டிங்கு ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்து அழுத்தி என் செவியில் 60

எல்லை இல்லா ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டி
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம்காட்டி
அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்க் 65

கணுமுற்றி நின்ற கரும்பு உள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடும்மெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சு அக்கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கரத்தின் நிலையறி வித்துத் 70

தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே

Tuesday, July 29, 2014

வைணவம்

வைணவம்

ஓம் நமோ நாராயணாய

இது மதுரகவிஆழ்வார் என்னும் ஆழ்வாரினால் பாடப்பட்டது. அவர் தன் குருவான நம்மாழ்வாரை நினைத்து பாடினது. இவர் ஒரு ஆழ்வார் தான் திருமாலைப்பாடாமல் குருவை மட்டுமே பாடினவர்.

இதை 10000 தடவை சொன்னால் நம்மாழ்வார் நேரில் வருவதாக ஒரு நம்பிக்கை

மதுரகவிஆழ்வார் ஞானத்தை தேடி காசி வரை சென்றார். அங்கே ஒரு ஜொதி தெரிந்தது. அந்த ஜோதியை பின்பற்றி நடந்து சென்றார். அது அவரின் சொந்த ஊர் பக்கம் இருக்கும் ஆழ்வார்திருநகரி வரை வந்தது.
பின் ஒரு புளியமர பொந்தில் போய் மறந்தது. அந்த பொந்தில் நம்மாழ்வார் தவம் செய்து கொண்டு இருந்தார்

இதைப்பார்த்த மதுரகவி ஆழ்வார் , நம்மாழ்வாரை எழுப்ப சிறு சத்தம் எழுப்பினார். ஒரு கல்லை தூக்கி எறிந்தார் என்றும் சொல்லுவார்கள். நம்மாழ்வாரைப்பார்த்து

“செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எங்கே கிடக்கும்” என்று கேட்டார்

அதற்கு நம்மாழ்வார் “அத்தை தின்று அங்கே கிடக்கும்” என்று பதில் சொன்னார்.

அதற்கு அர்த்தம் என்னவென்றால் செத்ததாகிக இந்த அண்டத்தில் வயிற்றில் சிறியதாகி ஆன்மாக்கள் பிறந்தால் எதைத்தின்று எங்கே கிடக்கும் என்று அர்த்தம்.

பரம்பொருள் நாராயணனே என்று அறியாமல் இன்ப துன்பங்களை நுகர்ந்து பிறப்பு இறப்பில் அங்கேயெ கிடக்கும் என்று பதில் சொன்னார். அருமையான பதில்

நம்மாழ்வாரை பற்றி மதுரகவிஆழ்வார் எழுதின பாடல் இது

1. கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணிய பெருமாயன் என் அப்பனில்
நண்ணித்தென் குருகூர் நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே.

2.நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே
தேவு மற்றறியேன் குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே.

3.திரிதந்தாகிலும் தேவபிரானுடை
கரியகோலத் திருவுருக் காண்பன் நான்
பெரிய வண்குருகூர் நகர்நம்பிக்கு ஆள்
உரியனாய் அடியேன் பெற்ற நன்மையே.

4.நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்
புன்மையாகக் கருதுவர் ஆதலின்
அன்னையாய் அத்தனாய் என்னையாண்டிடும்
தன்மையான் சடகோபன் என் நம்பியே.

5.நம்பினேன் பிறர் நன்பொருள் தன்னையும்
நம்பினேன் மடவாரையும் முன்னெலாம்
செம்பொன்மாடத் திருக்குருகூர் நம்பிக்கு
அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்றே.

6.இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்
நின்று தன்புகழ் ஏத்த அருளினான்
குன்றமாடத் திருக்குருகூர் நம்பி
என்றும் என்னை இகழ்விலன் காண்மினே.

7.கண்டு கொண்டென்னை காரிமாறப் பிரான்
பண்டை வல்வினை பாற்றியருளினான்
எண் திசையும் அறிய இயம்புகேன்
ஒண்தமிழ் சடகோபன் அருளையே.

8.அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
அருளினான் அவ்வருமறையின் பொருள்
அருள்கொண்டு ஆயிரம் இன்தமிழ் பாடினான்
அருள் கண்டீர் இவ்வுலகினல் மிக்கதே.

9.மிக்கவேதியர் வேதத்தின் உட்பொருள்
நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
தக்கசீர்ச் சடகோபன் என் நம்பிக்கு ஆள்
புக்க காதல் அடிமைப் பயன் அன்றே.

10.பயனன்றாகிலும் பாங்கல்லராகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணிகொள்வான்
குயில் நின்றார்பொழில் சூழ் குருகூர் நம்பி
முயல்கின்றேன் உன்தன் மொய்கழற்கு அன்பையே.

11.அன்பன் தன்னை அடைந்தவர்கட்கெல்லாம்
அன்பன் தென்குருகூர் நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே.

இந்து மத சுருக்கம்

இறைவனை உள்ளுக்குள் உணர வேண்டி ஆதிசஙக்ரர் எளிமையாக சனாதன தர்மம் என்னும் இந்து மதத்தை 6 பிரிவுகளாக பிரித்தார்

சைவம்

”ஓம் நமச்சிவாய”

என்னும் மகா மந்திரத்தை (பஞ்சாட்சரம்) தினமும் எப்பொழுதெலாம் நேரம் கிடைக்கிறதோ அப்போவெலாம் சொல்லவேண்டும்

அப்படியே சிவபுராணம் என்னும் மாணிக்கவாசகர் இயற்றியதை சொல்லவேண்டும். மாணிக்கவாசகர் சொல்ல சிதம்பரம் நடராஜரே எழுதியது தான் திருவாசகம். அதன் முக்கியமான பகுதியே சிவபுராணம்

----------- வைணவர்கள்
ஓம் நமோ நாராயணாய
”கண்ணினுன் சிறுத்தாம்பு” என்னும் மதுரகவிஆழ்வார் , நம்மாழ்வாரைப்பற்றி பாடியதை சொல்லவேண்டும்

----------- கௌமாரம்
ஓம் சரவணபவ அல்லது ஓம் முருகா
அத்தோடு “கந்தர் அனுபூதி” சொல்லவேண்டும்

----------- சாக்தம்
”ஓம் சக்தி” என்னும் மகாமந்திரம்
கூடவே அபிராமி அந்தாதி சொல்லவேண்டும்

----------- கணாபத்யம்
ஓம் கம் கணபதயே நம
கூடவே “விநாயகர் அகவல்” சொல்லவேண்டும்

--------------- சௌரம் ------------
ஓம் பூர்புவஸ்ஸுவக
ஓம் தத்சவிதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோயோந பிரச்சோதயாத்

இதற்கு அர்த்தம் என்னவென்றால் “என்னுள்ளே இருந்து அறிவைத்தூண்டும் சுடர்கடவுளாகிய சூரிய பகவானை தியானிப்போமாக” ------------------------------------------------------------------------
இதில் இருக்கும் 6 பிரிவுகளில் ஏதாவது ஒன்றை எடுத்து கொள்ளவேண்டும். அதற்கு வாழ்க்கையை அர்பனிக்கவேண்டும். தினமும் தியானித்து வந்தால் கண்டிப்பாக அத்வைத அனுபூதி கிடைக்கும் என்று மகான்கள் சொல்லியிருக்கிறார்கள்.
மேலும் எழுதினால் இடம் பத்தாது என்பதால் நாளை ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி விளக்கம் தருகிறேன். இது சுருக்கமனது மட்டுமே

Monday, July 28, 2014

மனீஷா பஞ்சக கதை


அத்வைத ஆச்சாரியாரான ஆதி சங்கரர் ஒரு தடவை காசியில் குளிக்க சென்றார்(சிஷ்யர்களோடு). அப்போழுது ஒரு புலையர் கையில் 4 நாய்களோடு எதிரில் வந்தார். ஆதிசங்கரரோ அவரை விலகிப்போ என்று சொன்னார்.

அதற்கு அவர் “உள்ள பொருள் ஒன்றே என்றால் யார் யாரிடமிருந்து விலகிப்போவது? ” விலகிப்போகவேண்டியது உடலா? மனமா? ஆன்மாவா?”

எங்கும் உள்ளது ஆத்மா என்றால் எப்படி விலகிப்போவது? என்று கேட்டார். இதனால் உண்மையை உணர்ந்த ஆதி சங்கரர் மனீஷாபஞ்சகம் என்ற துதிநூலை எழுதி அங்கேயே அந்த புலையரை துதித்தார்.

மனீஷா பஞ்சகம் என்ற நூல் அருமையான அத்வைத கருத்துகக்ள் அடங்கியது. அதன் தத்துவங்கள் நாளை பாக்கலாம்

Sunday, July 27, 2014

அத்வைதம்

சுருக்கமான கதை(எனக்கு சரியாக எழுத தெரியாத காரணத்தினால் எழுத்துப்பிழை, வாக்கியப்பிழையை பொறுக்கவேண்டும்)

நாம தேவர் என்ற மகான் வட இந்தியாவில் புகழ் பெற்றவர். அவர் சிறுவயதிலேயே விட்டோபா என்ற திருமாலின் கருணையைப்பெற்றவர். அதனால் பக்தியில் திளைத்தவர்.

அவர் ஒரு சத்சஙக்த்திற்கு போனார். அதில் கோராகும்பர் என்ற மகானும் இருந்தார். அவர் குயவர் இனத்தை சேர்ந்தவர். அவருக்கு ஒரு எண்ணம் வந்தது . குயவர் சட்டி தட்டும் கட்டையால் எல்லோர் தலையிலும் தட்டிப்பார்த்து சுட்ட சட்டி எது? சுடாத சட்டி எது? என்று பார்த்தார்.

அப்பொழுது நாம தேவர் தலையில் தட்டும்போது நாம தேவர் பொங்கி எழுந்தார். என் தலையில் தட்டி என்னை பரிசோதிக்க நீ யார் என்று இரைந்து பேசினார்.

இதைப்பார்த்த கோராகும்பர் இதோ ஒரு சுடாத மண்சட்டி என்று கிண்டல் செய்தார்.

அதனால் கோபப்பட்ட நாமதேவர் நேராக விட்டலனிடம்(விஷ்ணு) போனார். என்னைப்பார்த்து ஒரு குயவன் சுடாத பச்சை மண்சட்டி என்று சொல்லிவிட்டானே என்று கத்தினார். விட்டலனோ நீ உண்மையிலெயே சுடாத மண்சட்டிதான். அத்வைதம் என்ற தத்துவத்தை உணரவில்லை என்று பதில் சொன்னார்.

அந்த தத்துவத்தை நீயே விளக்கியருள் என்றூ நாமதேவர் கேட்டார். அதற்கு விட்டலனோ அதை விளக்க சத்குருவால் மட்டுமே முடியும் என்றூ சொல்லி அனுப்பினார். சத்குருவை நாமதேவர் தேடினார். விட்டலன் சத்குரு சிவன் கோயிலில் இருப்பதாக சொல்லி அனுப்பினார்.

அந்த சத்குருவை பார்க்க நாமதேவர் போனார். அவரோ வயோதிகர். வயதான காரணத்தினால் சிவலிங்கத்தின் மேல் கால் போட்டு படுத்திருந்தார்.

நாமதேவரால் இந்த அபசாரத்தை பொறுக்க முடியவில்லை. சத்குருவின் அபசாரத்தை நீக்கக்கருதி விளக்கமாக சொன்னார். அதற்கு சத்குருவான சிவனே பதில் சொன்னார். எங்கே சிவலிங்கம் இல்லையோ அங்கே என் காலை வை என்றார்.

நாமதேவர் காலை வேறோரிடம் எடுத்து வைத்தார். அங்கே புது சிவலிங்கம் உருவாகி காலைத்தாங்கி நின்றது. எங்கே காலை மாற்றி வைத்தாலும் சிவலிங்கம் உருவாகியது. நாமதேவர் குருவின் காலை எடுத்து தன் தலை மேல் வைத்தார். அதனால் நாமதேவரே சிவலிங்கமானார். குருவின் காலடி தீட்சையினால் மனம் பக்குவமானது.

நான் என்ற ஒன்று இல்லவே இல்லை. எங்கும் நிறைந்திருப்பவன் திருமால் என்ன்னும் விஷ்ணுவே என்ற உண்மையை உணர்ந்தார். சட்டி, சுட்ட சட்டி ஆனது.

அது முதல் நாமதேவர் கோவிலுக்கு போவதில்லை. ஒரு நாள் விஷ்ணுவே நேரில் தோன்றி “ஏதப்ப்பா என்னை அறவே மறந்துவிட்டாயே என்று கேட்டார். அதற்கு நாமதேவர் “பகவானே மறக்க நீயும் நானும் வேற. நீயும் நானும் ஒரே பொருள் இல்லையா?” என்று பதிலுக்கு கேட்டார். அப்பா சட்டி சுட்டசட்டி ஆகிவிட்டது என்று கூறி விஷ்ணு மறைந்தார்.

இந்தக்கதை வட இந்தியாவில் அத்வைத தத்துவத்தை உணர வைக்க ஆன்மீகவாதிகளால் சொல்லப்படுவது

நாமஜெபமே இறைவனை உணர்விக்கவல்லது(கலிகாலத்தில் மட்டும்). அதனால் நாம ஜெபம் செய்வோம். நான் என்ற ஒன்று இல்லவே இல்லை. எங்கும் நிறைந்திருப்பவன் இறைவன் மட்டுமெ என்ற உண்மையை உணர்வோம்.

Thursday, March 6, 2014

"கல்லாப்பிழையும் கருதாப்பிழையும் கசிந்துருகி
நில்லாப்பிழையும் நினையாப்பிழையும் நின் ஐந்தெழுத்தும்
சொல்லாப்பிழையும் துதியாப்பிழையும் தொழாப்பிழையும்
எல்லாப்பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே !