Showing posts with label ஐயப்பன். Show all posts
Showing posts with label ஐயப்பன். Show all posts

Thursday, December 8, 2011

கேரளாவின் நிலக்கல் பகுதியில் 10க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் மீது தாக்குதல்

நிலக்கல்: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் தமிழக பக்தர்கள் மீதான தாக்குதல் தொடர்கதையாகியுள்ளது. நிலக்கல் பகுதியில் தமிழக ஐயப்ப பக்தர்களின் வாகனங்களை நிறுத்தி சரமாரியாக ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. டிரைவர்களிடமிருந்து பணத்தையும் அக்கும்பல் பறித்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் தங்கிச் செல்லும் முக்கியப் பகுதி நிலக்கல் ஆகும். இங்கு பிரபலமான சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். மேலும், நிலக்கல்லானது பிரபலமான சுற்றுலாத் தலமும் கூட.

இந்த நிலையில், இப்பகுதியில் ஒரு கும்பல் இன்று தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்களின் வாகனங்களை நிறுத்தி சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளது. அப்பகுதியில் வந்த தமிழக பக்தர்களின் வாகனங்களை நிறுத்திய அக்கும்பல் 10க்கும் மேற்பட்ட வாகனங்களை தாக்கி சேதப்படுத்தியது. பின்னர் டிரைவர்களிடமிருந்து பணத்தையும் அவர்கள் பறித்துக் கொண்டு ஓடி விட்டனர்.

இந்த சம்பவத்தால் நிலக்கல் பகுதியில் பெரும் பதட்டமும், பரபரப்பும் நிலவுகிறது.

நன்றி: ezhila.blogspot.com